முத்துப் போன்ற பற்கள் வேண்டுமா
முத்துப் போன்ற பற்கள் வேண்டுமா இதைப் பாலோ பண்ணுங்க, உங்கள் பற்கள் பளப்பளாக இருக்க இதைப் பாலோ பண்ணுங்க, இந்த முறைகள் நாம் பாலோ பண்ணும் போதும் பற்கள் பலமாகும். பற்களுக்கு உறுதித்தன்மை பெறலாம் நமக்குத் தேவையானது கிடைக்கும்.
கருவேலம்பட்டை பொடி:
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி போகனுமா வாழ்க்கை செமயா இருக்கனுமா இதை பாலோ பண்ணுங்க
பற்கள் வெண்மையாக பற்களில் இருக்கின்ற அழுக்கு போக கருவேலம் பொடி உதவியாக இருக்கும்.
பற்கள் வெண்மையாக கருங்காலி பிசினை பல்பொடியாக்கி பயன்படுத்த பற்கள் வெண்மையாகும்.
பற்கள் உறுதியாக இருக்க:
பற்கள் உறுதியாக இருக்க கருவேலம்பட்டை, ஆலம் விழுது, தென்னங்குரும்பை ஆகியவற்றை பொடி செய்து பல் துலக்கி வர பற்கள உறுதியாக இருக்கும். கெமிக்கல் சிக்கல் என்பது இல்லை கொரானா தொல்லைக் காலத்தில் நாம் நம்மை பாதுகாக்க வேண்டியது அவசியம் ஆகும்.
பல் சொத்தை,பற்களில் இருந்து சீழ் வடிதல்,பற்கள் வலுவின்றி ஆடுவது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட
பிரமத்தண்டு இலையில் சாம்பலை கொண்டு பற்களை துலக்கி வருவதால் பல் சொத்தை, பற்களில் இருந்து சீழ் வடிதல்,பற்கள் வலுவின்றி ஆடுவது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபலாம். சாம்பலில் பல்விலக்குவதான்னு சட்டம் பேச வேண்டாம்
பற்கள் சம்மந்தம்மான அனைத்து நோய்களும் தீர
செவ்வாளைப்பழம் சாப்பிட்டுவாங்க, பற்கள் சம்மந்தம்மான அனைத்து நோய்களுக்கும் மிகச்சிறந்த மாமருந்து.இதனை தினமும் இரவு நேரத்தில் சாப்பிட்டு வருவதால் பல்வலி,ஈறுவீக்கம்,பல்லில் ரத்தக்கசிவு ,பல் சொத்தை இவைகளில் இருந்து விடுபடலாம்.
பல் சுத்தம்:
திரிபலா பொடி, வேப்பங்குச்சி இவைகளை பயன்படுத்தி பல் துலக்கி வர பற்கள் உறுதியாகவும், சுத்தமாகவும் இருக்கும். ஆமாங்க இதெல்லாம் நம் முன்னோர்கள் சொன்னதுதாங்க இதையெல்லாம் நாம் விட்டுவிட்டோம் அதான் டெண்டிஸ்ட் கிட்ட க்யூ கட்டி நிற்கின்றோம்.
பற்கள் உறுதியாக:
பற்கள் வலுபெற பற்களைத் தூய்மையாக்கி, பளிச்சிட வைப்பதில் துளசிக்கு பெரும் பங்கு உண்டு.சம்பா கோதுமை, துளசி, சர்க்கரை, பச்சை கற்பூரம் இவற்றை சேர்த்துக் கலந்து தினமும் பல் தேய்த்து வர,பற்கள் பளபளக்கும். இதென்ங்க இது இப்படி இருக்குன்னா இதாங்க வாழ்க்கை முறை இப்படிதாங்க நம் முன்னோர்கள் வாழ்ந்தாங்க ஓடுல கோல்டு இருக்குங்க. அது நம்ம மண்ணூ மண்டைகளுக்கு ஏறதில்லங்க.
பற்கள் உறுதியாக இருக்கனுமா:
பற்கள் வலுவடைய புதினா பொடியுடன் தேன் கலந்து சாப்பிட பற்கள் வலுவடையும். இதனால் உடல் வலு பெறும்.
உறுதியற்ற பற்கள்:
நெல்லிகாயை பற்களினால் நன்கு மென்று தின்று வர பற்கள் உறுதி பெறும். பல்லில் இருக்கின்ற பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
பற்கள் உறுதியாக:
பற்கள் உறுதியாக நெல்லிக்காயை தினசரி மென்று சாப்பிட்டு வந்தால் பற்கள் உறுதி பெறும். உடலில் சூடு குறையும். அது தெரிந்தும் நாம் மேற்கத்திய உணவுகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம்.
பல் மருத்துவம்:
சுக்கு இருந்தால் அனைத்துப் பிரச்சனையும் சுக்கு நூறாக்கும் அதனை தெரிந்து செயல்பட வேண்டும். பசியுண்டாக அது போதுமே
சுக்கு:
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி கால் லிட்டர் நீரில் போட்டு பாதியாகக் காய்ச்சி தேவையான அளவு பால், சர்க்கரை சேர்த்து இருவேளை சாப்பிட்டுவர வாயு அகன்று பசியுண்டாகும். இதை நாம் பழகுதல் அவசியம் ஆகும்.
தலைநோய், சீதளம், வாதக்குன்மம், விலாக்குத்து, வயித்துக்குத்து, நீர் பீனிசம், நீர் ஏற்றம், நீர் கோர்வை, கீல் பிடிப்பு, ஆசன நோய், பல் வலி, காது குத்தல், சுவாச ரோகம் ஆகியவை குணமாகும். இதென்னாங்க இவ்ளோ பெரிய லிஸ்டா ஆமாங்க அதான் சுக்கோட மகிமை ஆகும்.
சுக்கு டானிக்:
சுக்கு டானிக் பன்னுங்க வாழ்க்கை வளமடையும். சுக்கு 10 கிராம், மிளகு 6, சீரகம் 35, பூண்டுப் பல் 3, ஓமம் 10 கிராம், உப்பு 4 கல் ஓட்டில் வறுத்து 5 கிராம் வேப்பங்கொழுந்துடன் மைய அரைத்து 50 மில்லி வெந்நீரில் கலந்து வடிகட்டி குழந்தைகளுக்கு 1/2 சங்கு அளவு தாய்ப்பாலில் கலந்து 4 வேளை கொடுக்க வயிற்றுக் கோளாறு அனைத்தும் குணமாகும். இதுதான் சுக்கு மகிமை நமக்கு சுறுக்குன்னு இருக்கும்.
மோர் சுக்கு:
சுக்கு, கடுக்காய்ப் பிஞ்சு, ஆவாரை வகைக்கு 10 கிராம் எடுத்து அரைத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 1/4 லிட்டராக காய்ச்சி, வடிகட்டி 10 கிராம் பேதி உப்பு கலந்து குடிக்க ஆயாசமின்றி பேதியாகும். பேதி அதிகம் காணப்பட்டால் மோர் சாப்பிட நின்று விடும். இதில் உள்ள சத்துக்கள் நம்மைக் காக்கும்.
சுக்கு, காசுக்கட்டி, கடுக்காய்த்தூள், இந்துப்பு சமஅளவாக எடுத்துப் பொடி செய்து பல்பொடியாகப் பயன்படுத்த பல் ஆட்டம், பல் சொத்தை, ரத்தக் கசிவு குணமாகும். இதெல்லாம் நாம் பயன்படுத்த வேண்டும்.