செய்திகள்தேசியம்

இஸ்ரேல் இளைஞர்களுக்கு கிடைத்த பழமையான தங்கப்புதையல்

ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த அப்பாஸித் கலிபாட் காலத்திற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த 24 கேரட் தூய தங்கம் நாணயங்கள். மேலும் பானையில் 425 பொற்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் தங்க விலை மிக சொற்பமாக இருந்திருக்கும் என்று நாணய நிபுணர் ராபர்ட் கூல் தெரிவித்துள்ளார்.

இந்த நாணயத்தின் தொகையை வைத்து அந்த காலத்தில் எகிப்தின் செல்வந்த தலைநகர் ஃபுஸ்டாட்டில் ஒரு ஆடம்பர வீட்டை வாங்கி இருக்க முடியும் என்றும் கூறியுள்ளார்கள்.

இந்த புதையல் மறைத்து வைக்கப்பட்ட இடம் மற்றும் அந்த உரிமையாளர் பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று இதை கண்டுபிடித்த இளைஞர்களில் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் தலையை தோண்டிய போது மிக மெல்லிய இலைகள் போன்று தென் பட்டதாகவும், அதை மீண்டும் தோண்டி பார்த்த போது தான் தங்க நாணயங்கள் கண்டறியப்பட்டதாக கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 18ஆம் தேதி இந்த புதையல் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம் தெரிவித்துள்ளன. 1100 ஆண்டுகளுக்கு முன்பு திரும்ப எடுத்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் அதைப் புதைத்து வைத்திருக்கிறார்கள்.

அதனால் தான் பானை நகராமல் இருக்க பத்திரமாக ஆணி அடித்து வைத்திருக்கிறார்கள் என்று அகழ்வாராய்ச்சி இயக்குனர் லியாட் கூறியுள்ளார்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மண்பானையில் பதுக்கி வைத்திருந்த தங்க நாணயங்களை இஸ்ரேல் இளைஞர்கள் தோண்டி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆயிரம் ஆண்டுகள் பழமையான தங்க புதையலை தோண்டி எடுத்த இஸ்ரேல் இளைஞர்கள் பானையில் 425 பொற்காசுகள் இருந்ததாகவும் தெரியப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *