பட்ஜெட் 2021 வருமான வரி செலுத்துவோருக்கு வரி சலுகைக்கு வாய்ப்பு
பிப்ரவரி மாதம் முதல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளன. பட்ஜெட் வருமான வரி செலுத்துவோருக்கு வரிச்சலுகை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன. பொருளாதார நெருக்கடி, வறுமை அதிகரிப்பு, கொரோனாவால் ஏற்பட்டுள்ள பல்வேறு சூழல்கள் மத்தியில், பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ளது.
அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவோருக்கு ரூபாய் 80,000 வரை வரிச்சலுகை அறிவிக்க வாய்ப்பு உள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. இரண்டரை லட்சத்திற்கு கீழ் வருமான வரி இல்லை.
இரண்டரை லட்சத்திற்கு மேல் 5 லட்சத்திற்குள் ஐந்து சதவிகிதமும், ஐந்து லட்சம் முதல் ஏழரை லட்சம் வரை 10 சதவிகிதமும், ஏழரை லட்சம் முதல் 10 லட்சம் வரை 15 சதவிகிதமும், 10 முதல் 12 லட்சம் வரை 20 சதவிகிதமும், 15 லட்சத்திற்கு மேல் 30% வரிச்சலுகை இருந்து வருகின்றது.
60 வயது வரையிலான அனைத்து தனிநபர் வரி செலுத்துவோருக்கு இது பொருந்தும். ரூபாய் 50,000 வரை நிலையான வரி விலக்குகள் உள்ளன. வருமான வரி செலுத்துவோருக்கு சலுகை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வீட்டுக் கடனுக்கான வரிவிலக்கும் இதே போன்று அறிவிக்கப்படலாம்.