Thattai adai recepie: சுவைக்கும் அடை ; சுடசுட சுவைக்கும் கார அடை
என்னதான் கடையில் வாங்கி நான் சாப்பிட்டாலும் வீட்டில் செய்யும் ரெசிபி போல எதுவும் வராது அதுவும் விடுமுறை நாளில் அனைவரும் வீட்டில் உள்ள போது மாலை நேரத்தில் சுட சுட ஏதாவது அனைவரும் அமர்ந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் என நினைத்தவர்கள் ஏராளம் . சாப்பிடலாம் என்று யோசனை விட என்ன சமைக்கலாம் என்ன ரெசிபி செய்யலாம் என்று யோசனை அதிகமாக இருக்கும் இனி கவலையே வேண்டாம் மாலை நேரத்தில் சுட சுட சுவையான காரத்துடன் அனைவரும் நொறுக்கும் ஸ்நாக்ஸாக இது இருக்கும். அப்படி என்ன ரெசிபி என்று பார்க்கலாம்.
கார அடை தேவையான பொருட்கள்
கார அடை செய்வதற்கு என்ன பொருட்கள் தேவை என்பதை தெரிந்து கொள்வோம்
அரிசி மாவு – 1 கப்
உளுந்து மாவு – 1 டீஸ்பூன்
கடலை மாவு – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
பொட்டுக்கடலை அல்லது கடலைப்பருப்பு – சிறிதளவு
கருவேப்பிலை – தேவையான அளவு
மேலும் படிக்க : சைவப் பிரியர்களின் ஸ்பெஷல் கலர்ஃபுல் பிரியாணி.!
செய்முறை
ஒரு கடாயில் ஒரு கப் அளவு அரிசி மாவு மற்றும் ஒரு டீஸ்பூன் அளவு உளுந்து மாவு எடுத்துக் கொண்டு ஒரு ஐந்து நிமிடத்திற்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும் அது நன்றாக ஆரிய பின்பு அதில் கடலை மாவு ,ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு ,தேவையான அளவு சீரகம், சிறிதளவு கருவேப்பிலை , பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.அதில் ஒரு டீஸ்பூன் அளவு நெய் அல்லது பட்டர் சேர்த்து செய்து கொள்ளவும் .
பின்பு மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் அவ்வளவுதான் நமக்கு தேவையான அடை மாவு ரெடி. பின்பு இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வட்டமான வடிவில் மெலிதாக தட்டி எடுத்துக் கொள்ளவும் இதனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சூடான சுவையான மொறு மொறு தட்டை அடை ரெடி..
உங்கள் குடும்பத்துடன் அமர்ந்து மகிழ்ச்சியாக சாப்பிட்டு மகிழுங்கள்.
மேலும் படிக்க : நூடுல்ஸ் மேலுள்ள ஆசை தீர்வதில்லையா.!