ஆரோக்கியம்சமையல் குறிப்புயூடியூபெர்ஸ்வாழ்க்கை முறை

நாவில் எச்சில் ஊற வைக்கும் ரவா பணியாரம்

எல்லோரும் இட்லி தோசையை விட பணியாரம் என்றால் அதிகம் விரும்பி சாப்பிடுவர். அதுவும் ரோட்டோரத்தில் பாட்டிமா போடும் பணியாரத்திற்கு ஈடு இணையே இல்லை. பெரிய பெரிய 5 ஸ்டார், 3 ஸ்டார் ஹோட்டல்களில் கூட இந்த ருசியை அனுபவித்து விட முடியாது. தென்றல் காற்று வீச தேனாய் இசை கேட்க நமது பாட்டி மாவின் சமையல் கைத்திறனின் வெளிப்பாடாக சுவையான பணியாரம் சூடாக காரச் சட்னியுடன் நம் கையில் வந்து கொடுக்கும் போது அதை ஆவி பறக்க நம் வாயில் வைத்து உண்ணும் போது வரும் சுவையோ தனி சுவைதான்.. இப்படி பணியார பிரியர்கள் தற்பொழுது ரோட்டோரத்தில் சாப்பிட்டு ரசிக்க அதிகமான கடைகளும் இல்லை பழைய சுவையில் கொடுக்க நமது பாட்டிகளும் இல்லை. வளர்ந்து வரும் நாட்டில் ரோட்டோர கடைகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கடைகளின் எண்ணிக்கை குறைந்தால் என்ன அவர்களின் கைமணம் மாறாத சுவையான பணியாரத்தை நம் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். பணியாரம் செய்யும் முறையை பின்வருமாறு காணலாம்

தேவையான பொருட்கள்

அரிசி மாவு – 200கிராம்

ரவை – 5 ஸ்பூன்

நறுக்கிய வெங்காயம் சிறிதளவு

நறுக்கிய பச்சை மிளகாய் சிறிதளவு

சீரகம் தேவையான அளவு

உப்பு தேவையான அளவு

தயிர் – 1 டீஸ்பூன்

பெருங்காயம் சிறிதளவு

ரவா பணியாரம் செய்யும் முறை

ஒரு சுத்தமான பாத்திரத்தில் நாம் வாங்கி வைத்த 200 கிராம் அரிசி மாவை எடுத்துக் கொள்ளவும். அதில் நாலு டீஸ்பூன் அளவு ரவையை சேர்த்துக் கொள்ளவும் .பின்பு அதில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும் மேலும் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். பின்பு அதில் சிறிதளவு சீரகம் தேவையான அளவு உப்பு புளிப்பு இல்லாத சுவையான தயிர் ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை சேர்க்கவும் மேலும் அதில் சிறிதளவு பெருங்காயம் சேர்த்துக் கொள்ளவும் இவை அனைத்தையும் சேர்த்த பின்பு சிறிது சிறிதாக அதில் தண்ணீரை விட்டு நன்றாக பணியாரம் ஊற்றும் பதத்திற்கு வரும் வரை தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.

பணியார பதத்திற்கு வந்த மாவை ஒரு இருபது நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும் 20 நிமிடம் கழித்து அந்த மாவை எடுத்து பணியார கல்லில் முதலில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பின்பு அதில் நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்த மாவை ஊற்றவும் ஒரு ஒரு நிமிட கால அளவிற்கு பணியார கல்லை மூடி வைத்து வேக வைக்க வேண்டும் பின்பு பணியாரத்தை திருப்பி போட்டு மேலும் ஒரு நிமிடம் வேக வைத்து எடுத்து விடலாம்.

அவ்வளவுதான் சூடான சுவையான ரவா பணியாரம் ரெடி இதற்கு ஏற்றபடி காரச் சட்னி அல்லது தேங்காய் சட்னி ஆகியவை அரைத்து நாம் காலை உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது மாலை வேளையில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதற்கு பதில் இவ்வாறு பணியாரம் செய்து இதையே எடுத்துக் கொள்ளலாம் உடலுக்கு ஆரோக்கியமாகவும் நாவிற்கு சுவையாகவும் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *