ஆரோக்கியம்சமையல் குறிப்புயூடியூபெர்ஸ்

சிக்கன் பக்கோடாவே தோற்றுப்போகும் மொரு மொரு பக்கோடா..

பொதுவாகவே ஈவினிங் ஸ்நாக்ஸ் என்றாலே பக்கோடா கண்டிப்பாக இருக்கும் .அதுவும் சிக்கன் பக்கோடா அனைவரும் ரசித்து உண்பர். ஆனால் அசைவப் பிரியர்களுக்கு மட்டுமே அது பொருந்தும். இப்போது நாம் பார்க்கப்போகும் பக்கோடா அசைவ பிரியர்களும் சைவ பிரியர்களும் மிக விரும்பி உண்ணக் கூடிய ரெசிபியாக அமையும். இது செய்முறையும் எளிதாக இருக்கும் செலவும் குறைவாக இருக்கும் ஒரு ரெசிபி யாக உங்களுக்கு அமையும்…

தேவையான பொருட்கள்

மீல் மேக்கர் – 1 கப் (60 கிராம்),

உப்பு – 1/2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 ஒரு சிட்டிகை

சீராக தூள் – 1/2 டீ ஸ்பூன்

கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்

காஸ்மீரி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்

கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு – பாதி எலுமிச்சை அளவு

உப்பு – தேவையான அளவு

பச்சை மிளகாய் – 5

கருவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 4 கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும் கொதித்த தண்ணீரில் நாம் எடுத்து வைத்த மீல் மேக்கர் சேர்த்து சிறிதளவு உப்பு கலந்து மூடிவிடவேண்டும் அடுப்பை அணைத்து பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும்.15 நிமிடங்கள் கழித்து எடுத்து பச்சைத் தண்ணீரில் நன்றாக அலசிக் கொள்ளவும்.பின்பு சிறிதளவு தண்ணீர் கூட இல்லாத அளவு பிழிந்து எடுத்துக் கொள்ளவும் இப்போது மீல் மேக்கர் மிக மிருதுவாக இருக்கும்.

மிருதுவான மீல் மேக்கர் இல் மஞ்சள் தூள் ,கரம் மசாலா ,மிளகாய்த்தூள், சீரகத்தூள், அரிசி மாவு, கடலை மாவு ,இஞ்சி பூண்டு விழுது ,எலுமிச்சை சாறு ,தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்பு பிசைந்து வைத்த கலவையை ஒரு இருபது நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

பின்பு ஒரு கடாயில் என்னை நன்றாக சூடானதும் மீல் மேக்கரை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.பின்பு அதே எண்ணெயில் வெட்டிவைத்த கறிவேப்பிலை வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மொறு மொறுவென பொரித்து எடுத்துக் கொள்ளவும் பின்பு அதனை நாம் ஏற்கனவே பொரித்து வைத்த மீல் மேக்கர் மீது இதனை தூவி எடுத்துக்கொள்ளவும் அவ்வளவுதான் சுவையான சூடான அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய மீன் மேக்கர் பக்கோடா ரெடி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *