Soya 65 recipe: மாலை நேர அட்டகாசமான ஸ்பைசி சோயா 65 ரெசிபி
மாலை நேரம் என்றாலே நமக்கு ஏதாவது நொறுக்கு தீனி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தான் முதலில் வரும். அதுவும் விடுமுறை நாட்களில் அனைவரும் வீட்டில் இருக்கும் பொழுது குடும்பத்துடன் அமர்ந்து ஏதாவது நொறுக்கு தீனியை சாப்பிட்டுக் கொண்டே டிவி பார்த்துக்கொண்டு அரட்டை அடிப்பது என்பது நினைத்துப் பார்க்கும்போது மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும்.
நொறுக்குத் தீனி சாப்பிட ஆசையா தான் இருக்கு ஆனா அதை யாரு செய்யறது அப்படிங்கறது தான் இப்ப கேள்வியா இருக்கு அப்படின்னு சொல்றவங்களுக்காக ஈஸியா பத்து நிமிஷத்தில் மொறு மொறுன்னு ஸ்பைசியான ஒரு ரெசிபி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் இந்த ஸ்னாக்ஸ் உங்களின் மாலை நேரத்தை மேலும் அழகாக்கும்.
தேவையான பொருட்கள்
சோயா பீன்ஸ் – 1 கப்
கடலை மாவு – 3 டீஸ்பூன்
அரிசி மாவு – 3 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – சிறிதளவு
சோயா 65 செய்முறை
முதலில் நாம் எடுத்து வைத்த சோயா பீன்சை சூடான தண்ணீரில் போட்டு ஒரு பத்து நிமிடம் வைக்க வேண்டும். பின்பு சோயா பீன்ஸ் எடுத்து குளிர்ந்த நீரில் கழுவி நன்கு பிளிந்தெடுக்க வேண்டும். ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு மற்றும் மிளகாய்த் தூள், மல்லித்தூள், கரம் மசாலா தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்பு அதில் இஞ்சி பூண்டு விழுது , நறுக்கி வைத்த கொத்தமல்லி இலை கருவேப்பிலை , தேவையான அளவு எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். பின்பு அதில் சோயா பீன்ஸ் போட்டு நன்கு கலக்க வேண்டும். தண்ணீர் பற்றவில்லை என்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த மசாலா கலவையை 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சோயாபீன்ஸ் சிறிது சிறிதாக போட்டு பொரித்தெடுக்க வேண்டும் அவ்வளவுதான் சூடான மொறுமொறுப்பான சூப்பர் ஸ்பைசியான சோயா 65 ரெடி..
நீங்கள் குடும்பத்துடன் அமர்ந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட சூப்பர் ரெசிபியாக இருக்கும்.