மிக்ஸ்டு ஃப்ரூட் பொங்கல்
மிக்ஸ்டு ஃப்ரூட் பொங்கல். பொங்கல் வைக்கும் போது அரிசி, பாசிப்பருப்பு வைத்து பொங்கல் செய்வது வழக்கம். கரும்புச்சாறு, மிக்ஸ்டு ஃப்ரூட் சேர்த்து செய்யக்கூடிய மிக்ஸ்டு ஃப்ரூட் பொங்கல் கூடுதல் டேஸ்ட் கொடுக்கும்.
மிக்ஸ்டு ஃப்ரூட் பொங்கல்
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு 50 கிராம், பச்சரிசி 250 கிராம், முந்திரி 7, உலர் திராட்சை 15, மிக்ஸ்டு ஃப்ரூட் 3 ஸ்பூன், கரும்புச் சாறு ஒருடம்ளர், நெய் 50 மில்லி, கல்கண்டு 200 கிராம், ஏலக்காய் 4.
செய்முறை விளக்கம்
பாசிப்பருப்பை லேசாக வறுத்து எடுத்து இதனுடன் அரிசியையும் சேர்த்து கழுவி குக்கரில் இரண்டு மடங்கு தண்ணீர் வைத்து வேக வைத்து எடுக்கவும். ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காயை வறுத்து எடுத்து வைக்கவும். மிக்ஸ்டு ஃப்ரூட் கல்கண்டு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கரும்புச்சாறு கலந்து விடவும்.
இதனுடன் வேக வைத்த பருப்பு அரிசியை சேர்த்து மசித்து விடவும். மீதமுள்ள நெய்யையும் சேர்த்து ஒன்றாக சேர்ந்து சிறிது நேரம் மிதமான தீயில் அடுப்பில் வைத்து கிளறி இறக்கி விடவும். கடைசியாக வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறினால் டேஸ்டான மிக்ஸட் ஃப்ரூட் பொங்கல் தயார்.