அசத்தல் ஆலு போண்டா
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு மிகவும் பிடிக்கும். தீபாவளி பலகாரங்கள் செய்யும் போது இந்த உருளைக்கிழங்கு போண்டாவும் செய்வது வழக்கம். அசத்தலான ஆலு போண்டா சாப்பிட தயாரா.
- அசத்தலான ஆலு போண்டா.
- தீபாவளி பலகார போண்டா செய்வது வழக்கம்.
- அசத்தலான உருளைக்கிழங்கு போண்டா.
ஆலு போண்டா
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு கால் கிலோ, இஞ்சி ஒரு துண்டு, சோம்பு அரை ஸ்பூன், கடலை மாவு 100 கிராம், மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன், உப்பு தேவையான அளவு. எண்ணெய், கடுகு தேவையான அளவு. பெரிய வெங்காயம் நறுக்கியது அரை கப், ஆப்ப சோடா மாவு மூன்று சிட்டிகை, கறிவேப்பிலை சிறிது, சோள மாவு ஒரு ஸ்பூன்.
செய்முறை விளக்கம்
உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து பிசைந்து வைத்துக் கொள்ளவும். ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, இஞ்சி பூண்டு, சோம்பு, வெங்காயம் தாளித்து கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து உப்பு போட்டு கிளறி சிறு உருண்டைகளாக எடுத்து வைக்கவும்.
இன்னொரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், சிறிது சோள மாவு, உப்பு கலந்து கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்தில் கலக்கி வைக்கவும். விரும்பினால் கலர் பொடி சேர்த்துக் கொள்ளலாம். சாப்ட்டாக வருவதற்கு சிறிது ஆப்ப சோடாவையும் கலக்கிக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணையை காயவைத்து உருளைக்கிழங்கு உருண்டைகளை இந்த மாவில் முக்கி, ஒவ்வொன்றாகப் பொரித்து எடுக்கவும். சுவையான ஆலு போண்டா தயார்.