சமையல் குறிப்புவாழ்க்கை முறை

மட்டன் ஸ்பெஷல் மட்டன் ருசியோ ருசி..!!

நம்ம வீட்டுல ஸ்பெசல்ன்னா மட்டன் மற்றும் சிக்கன் என்று நான்வெஜ் ஐட்டங்கள் முக்கிய இடம் பெரும். மட்டன் குழம்பு வைப்பதில் பலர் அவரவர் ஸ்டைலில் கலக்குவார்கள். ஆனால் மட்டன் குழம்பு அனைவருக்கும் ஒன்று போல் சுவையோ சுவக்க, மனமோ மனக்க இதை பாலோ பன்னுங்க.

மட்டன் கிரேவி தேவையான பொருட்கள்

மட்டன் கால் கிலோ, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து இரண்டு முறை கழுவி எடுத்து குக்கரில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து சிறிது இஞ்சி, பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், சிறிது மஞ்சள் தூள், உப்பு கலந்து மூன்று நான்கு விசில் விட்டு இறக்கவும்.

பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம் ஒரு கப் அளவு தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். 3 தக்காளி நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாய் இரண்டு கீறி வைக்கவும். பட்டை இரண்டு, கிராம்பு மூன்று, சோம்பு அரை ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், மட்டன் மசாலா பொடி, மல்லித் தூள் ஒரு ஸ்பூன், மிளகாய்தூள் ஒரு ஸ்பூன், தேங்காய் அரைமூடி துருவியது, கசகசா கால் டீஸ்பூன், முந்திரி 7, இவற்றை சிறிதுநேரம் சுடுதண்ணீரில் ஊற வைத்து மைய அரைத்து எடுத்து வைக்கவும்.

செய்முறை: ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணை காய்ந்ததும், பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு பொரியவிட்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் வதக்க வேண்டும். இதனுடன் தூள் வகைகள் மட்டன் மசாலாத்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, பிறகு தக்காளி சேர்த்து வதங்க விடவும்.

நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும், வேக வைத்த மட்டனை சேர்த்து வதக்கி, கிரேவிக்கு தேவையான தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். இரண்டு கொதி வந்த பிறகு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து இன்னொரு கொதி வந்ததும் கொத்த மல்லி தூவி இறக்கவும். சூடான சுவையான பார்த்தாலே சாப்பிட தோணும் மட்டன் கிரேவி தயார். சூடான சாதத்திற்கும் உளுந்தஞ்சோறுக்கும் ஏற்ற சைட் டிஷ்ஷாக இருக்கும்.

மட்டன் கோலா உருண்டை

மட்டன் கொத்து கறி: கடையில் மட்டனை கொத்தி தரச் சொல்லி கொத்துக்கறி ஆக கால் கிலோ வாங்கி கோங்க. இதில் தண்ணீர் விட்டு மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கழுவி பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறிய வெங்காயம் ஒரு கப் நறுக்கி வைக்கவும். பச்சை மிளகாய் 3 பொடியாக நறுக்கி வைக்கவும். உருளைக்கிழங்கு 2 வேக வைத்து தோலுரித்த மசித்துக் வைத்து கொள்ளவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிது நறுக்கி வைக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன், உப்பு மட்டன் மசாலா பொடி அரை ஸ்பூன், சோம்பு சிறிது.

செய்முறை :

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சோம்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், ஒவ்வொன்றாக வதக்கி கொத்துக்கறியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி வேக விடவும். மட்டன் மசாலா தூள், சேர்த்து வதங்கியதும், இதனுடன் உருளைக்கிழங்கை மசித்து, உப்பு, சேர்த்து சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

இன்னொரு வாணலியில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு, எண்ணெய் கொதித்ததும் ஒவ்வொரு உருண்டைகளாக பொரித்தெடுத்தால் மட்டன் கோலா உருண்டை தயார்.

கறியை கழுவி ஆட்டுக்கல் அல்லது கிரைண்டரில் ஒன்றிரண்டாக அரைத்தெடுத்து வதக்கலாம். இந்த சுவையான கோலா உருண்டையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *