குறையாத கொரானா தொற்று எண்ணிக்கை
இந்தியாவில் அதிகரித்துவரும் கொரானா தாக்கத்தால் மக்கள் பெருமளவில் பாதிப்படைந்து வருகின்றனர். கொரானா பாதிப்பு என்பது கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கின்றது. இதற்கு முறையான சமூக இடைவெளி இல்லாததே காரணம் என்பதை அரசு உணர்ந்துள்ளது.
கொரானா தொற்று அதிகரிக்க பெரும் காரணம் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுவதுதான் என்பதனை மக்கள் உணர வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் விழிப்புணர்வு இருக்க வேண்டியது அவசியம் அதன்மூலமே கொரனா தொற்று நோய் தடுக்க முடியும்.
சமூக இடைவெளி, சுகாதாரம், வெளியிடங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். சுத்தமாக கைகளை கழுவுதல் மாஸ்க் அணிந்து செல்லுதல் ஆகியவை மிக முக்கியமான ஒரு நடைமுறையாகும். இதனை பொதுமக்கள் நன்கு உணர்ந்து பின்பற்ற வேண்டும் சென்னையில் கொரனா தொற்று எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கின்றது.
தமிழகத்தில் இன்று 1974 பேர் கொரானா தொற்று உறுதியாகியுள்ளது. உறுதிசெய்யப்பட்டுள்ளது சென்னையில் மட்டும் 1 415 பேருக்கு உறுதியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 31, 896 பேர் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் அதிகரித்துவரும் இந்த எண்ணிக்கை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருநெல்வேலி, விழுப்புரம், மதுரை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, திருச்சி ஆகிய இடங்களில் எல்லாம் கொரானா தொற்று உருவாகி வருகிறது. கோவை, தர்மபுரி, ஈரோடு, கரூர் போன்ற பகுதிகளிலும் இன்று கொரானா தொற்று இருப்பவர்கள் உறுதியாகியுள்ளது.
கொரனாவால் இதுவரை 435 பேர் உயிரிழந்துள்ளனர் 20,000 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர் 24 ஆயிரம் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.