ராஜாமாதா காரில் மதுபாட்டில்கள்
ராஜமாதா காரிலிருந்து ரகசியம் என்ன, தமிழ் சினிமா சினிமாவில் வீரத்திற்கு பெயர் பெற்ற சிறந்த சீனியர் நடிகை என்றால் அது நம்ம ரம்யா கிருஷ்ணன் தான் சொல்லணும். அவர்கள் படையப்பா படத்தில் நடித்த படத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஒரு நீங்காத சிறப்புமிக்க நடிகையாக பெயர் பெற்றார். அதனை அடுத்து தமிழ்நாட்டில் அவருடைய படங்கள் ஒவ்வொன்றும் அதிகம் கவனிக்கப்பட்டது.
அம்மன் வேசங்களில் அவர் அனைத்து நடிகைகளிலும் மிகவும் பொருத்தமாக நடித்திருப்பார். திரையுலகின் ராஜமாதா தீடிர் போலீஸ் சோதனையில் மாட்டியுள்ளார்.
அதுபோல அவர் பாகுபலி படத்தில் நடித்தது ஆளுமையின் உச்சம் எனலாம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரியல் எடுத்தபோது அதில் முதல் சாய்ஸாக இருந்தது நமது ரம்யாகிருஷ்ணன் தான் அப்படியே தத்ரூபமாக நடித்து இருந்ததாக பிரபல நடிகர்கள் அனைவரும் பாராட்டி இருந்தனர். ஆளுமை குறையாத ரம்யா கிருஷ்ணன் அவர்கள் இன்று செய்தியில் கிசுகிசுக்கப்படுகின்றது காரணம் என்னவெனில் ஊரடங்கு தமிழ்நாட்டில் அமலில் உள்ளது என்னதான் தளர்வில் இருந்தாலும் மதுபான கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுபான கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை அடுத்து சென்னையை தாண்டி சென்று மது பாட்டில்கள் வாங்கி வருவதை தடுப்பதற்காக போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்து வாகனங்களை எல்லாம் பரிசோதித்து வருகின்றனர். இப்படி இருக்க சென்னையை தாண்டி சென்று மது பாட்டில்களை வாங்கி வந்து காரில் அதனை எடுத்து வந்தபோது நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் அவரது டிரைவர் மற்றும் சகோதரியுடன் மாட்டிக் கொண்டார்.
ரம்யா கிருஷ்ணன் அவர்கள் காரில் 96 பீர் பாட்டில்கள் மற்றும் 8 மதுபாட்டில்கள் இருந்திருக்கின்றது இதுதொடர்பாக அவரது டிரைவர் சென்னை அபிராமபுரத்தில் சேர்ந்த செல்வகுமார் அவர்கள் கைது செய்யப்பட்டார் ரம்யா கிருஷ்ணன் அவரை ஜாமீனில் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ரம்யா கிருஷ்ணன் கொண்டுவந்திருந்த மதுபானங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் இதுபோன்ற ரம்யாகிருஷ்ணன் சிக்கியதில் பெரும் அதிர்ச்சி தரும் செய்தியாக அனைவருக்கும் இருந்தது. கட்டளையே சாசனம் இன்று கச்சிதமாக மாட்டிக் கொண்டது எனலாம்.