செய்திகள்தமிழகம்தேசியம்

சிறந்து விளங்கும் மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம் தமிழக முதல்வர் பெருமிதம்

இந்தியா டுடே நடத்திய ஆய்வில் தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது. ஒட்டுமொத்த துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழ்நாட்டை முதல் இடமாக தேர்ந்தெடுத்து கடிதம் அனுப்பியுள்ளன. இந்தியா டுடே இதழ் நிர்வாகத்திற்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

  • ஒட்டுமொத்த துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம்.
  • இந்தியா டுடே இதழ் நிர்வாகத்திற்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
  • எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையோடு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒட்டு மொத்தமாக சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகத்திற்கு முதலிடம் கொடுத்த இந்தியா டுடே சிறப்பித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையோடு தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே 1975 ஆம் ஆண்டு துவங்கப்பட்டன. தேர்ந்த அரசியல் கட்டுரைகளுக்கும், தேர்தல் கருத்து கணிப்புகளுக்கும் புகழ்பெற்ற இந்தியா டுடே ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. 20 மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் இடம் பிடித்துள்ளன.

கேரளா நான்காவது இடத்திலும், ஆந்திரா 7வது இடம், தெலங்கானா ஒன்பதாவது இடம், கர்நாடகா 11வது இடம் என்ற வரிசையில் உள்ளன. இமாச்சலப் பிரதேசம் இரண்டாவது இடத்திலும், குஜராத் மூன்றாவது இடம் என தமிழகத்தை தொடர்ந்து பட்டியலில் 11 மாநிலங்கள் பாஜக ஆளாத மாநிலங்கள் இவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு அதிகாரிகள், பணியாளர்கள் உழைப்பு, அர்ப்பணிப்பு தமிழக மக்களின் ஒத்துழைப்பை தொடர்ந்து மூன்றாவது முறையாக சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வாகி சாதனை புரிந்துள்ளது. இவற்றை அனைவருக்கும் அன்போடு சமர்ப்பிக்கிறேன் என்று தமிழக வளர்ச்சிக்கு ஒற்றுமையாக உழைப்போம் தொடர்ந்து என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *