உருமாறிய கொரோனா தமிழகத்திற்கு சுகாதாரத் துறை அறிவிப்பு
நம் நாட்டில் கொரோனா தொற்று சற்று குறைந்த படி உள்ளன. அதன் பிறகு இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனவைரஸ் பரவத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய நபர்களை அரசு தீவிரமாக கண்காணித்து வந்தன.
உருமாறிய கொரோனா பாதிப்பு
நம் நாட்டில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளதை உறுதி செய்யப்பட்டுள்ளன. தமிழகத்திலும் ஒருவருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தனி அறையில் சிகிச்சை
பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளன. ஒருவருக்கு உருமாறிய கொரோனா என்பதால் தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பிரிட்டனில் இருந்து வந்த 30 பேரில் சோதனை மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. தமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவும் வாய்ப்பு குறைவாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.