தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்: சென்னை, மதுரை காவல் ஆணையர்கள் மாற்றம்: புதிய ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்.
சென்னை ஐஜி கணேசமூர்த்தி பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் -சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா மதுரை காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.(ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்து ஐஜி அந்தஸ்துக்கு மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது)
சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் -சென்னை சட்டம் ஒழுக்கு வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் காவல் ஆணையர் சஞ்சய்குமார் சென்னை தொழில் நுட்பப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சை டிஐஜிபியாக பதவி வகிக்கும் லோகநாதன் ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமர் சி சரத்கர் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சிபிசிஐடி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டிஐஜி கண்ணன் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் டிஐஜியாக பதவி வகிக்கும் சந்தோஷ்குமார் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை காவல் ஆணையரக நிர்வாக ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் டிஐஜி தேன்மொழி ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை டிஐஜி கார்த்திகேயன் ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருப்பூர் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் டிஐஜி ஜோஷி நிர்மல்குமார் ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை விரிவாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலோர பாதுகாப்பு குழும டிஐஜி புவனேஷ்வரி ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டு சென்னை ஐஜி (பொது) நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் மாற்றப்பட்டு சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமாரி கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை காவல் ஆணையரக தலைமையிட இணை ஆணையர் ஏ.ஜி.பாபு சென்னை தெற்குமண்டல இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை தெற்குமண்டல இணை ஆணையராக உள்ள மகேஷ்வரி சென்னை காவல் ஆணையரக தலைமையிட இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை போக்குவரத்து தெற்கு மண்டல இணை ஆணையர் எழிலரசன் விழுப்புரம் டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் – 2 தொடர்ந்து அடுத்த பதிவிலும் படிங்க.