தமிழக அரசிடமிருந்து மக்களுக்கான நற்செய்தி
திங்கட்கிழமை, ஆகஸ்ட் 10 தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறப்பு.
கொரோனா ஊரடங்கு ஆரம்பிச்சதோட நாலு மாசம் ஆகப் போகுது. ஊரடங்கு விதிமுறைகள் கொஞ்சம் கொஞ்சமா தளர்வு ஏற்பட்டு வர நிலையில மக்கள் கொரோனா பத்தின பயத்த விடுத்து பல விஷயங்களை நினைச்சு பயப்படுறாங்க.
ஊரடங்கு காலத்துல எந்த ஒரு வேலைக்கும் வழியில்லாம பணத் திண்டாட்டம் பல இடத்துல பரவி இருக்கு. அதற்கு அரசாங்கம் நியாய விலைக் கடைல வாழ்வாதாரத்துக்கு முக்கியமான சாப்பாட்டு பொருட்களை இலவசமாக கொடுக்க ஆரம்பிச்சாங்க.
பணம் இல்லாதவங்க கிட்ட பணம் மட்டும் தாங்க பிரச்சனையா இருந்துது. பணம் இருக்கிறவங்க கிட்ட பணத்த தவிர்த்து எல்லாமே பிரச்சனையா இருக்கு. என்னென்ன யோசிக்கிறீர்களா இதோ சொல்றேன் கேட்டுக்கோங்க.
நம்ம ஆசைப்படுவது யோசிக்கிறதுனு எதுவுமே வாங்க முடியலையே அப்படின்னு பணம் இருக்கிறவங்க கஷ்டப்படுறாங்க. அடிக்கடி ஹோட்டல்ல போய் சாப்பிட்டு பழகியவர்களுக்கு வீட்டிலேயே எல்லாத்தையும் சமைச்சு சாப்பிட கொஞ்சம் கஷ்டமா இருந்துது அதுக்கப்புறம் பழகினவங்களுக்கு விதவிதமா எதிர் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.
ஊரடங்கு கட்டுப்பாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமா தளர்ந்து மக்கள் இந்த பொதுவாழ்க்கைக்கு பழகிட்டாங்க. இன்னும் சொல்லப்போனால் இந்த சொகுசான வாழ்க்கை சூப்பரா இருந்துதுங்க. அப்படி போகமா ராஜா போல வாழ்ந்த வாழ்க்கையின் விளைவா வந்தது தொப்பை.
அது அடுத்த பிரச்சனையா மாறிச்சு. எல்லா நடிகர்களும் சமூகவலைத்தளங்கள்ல் அவங்கவங்க உடற்பயிற்சி வீடியோவ போட்டு வெறுப்பேத்தாத குறைய சாதாரண மக்கள் என்ன செய்யறதுன்னு தெரியாம திண்டாடிய பிரச்சினைக்கு இன்னிக்கி விடிவு காலம் வந்துடுச்சுங்க.
‘தமிழக அரசு இன்று உடற்பயிற்சி கூடங்களை திறக்க அனுமதி’ அப்படின்னு சூப்பரான விஷயத்தை வெளியிட்டு இருக்காங்க. இவ்ளோ நாள் உட்காந்து சாப்பிட்டவங்க எல்லாரும் ஜிம்ம நோக்கி ஓட ஆரம்பிச்சுட்டாங்கைய்யா ஆரம்பிச்சுட்டாங்கய்யா!
திறந்துட்டாங்க திறந்துட்டாங்க! கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா!
இதனால தொற்று வருமா அதனால தொற்று வருமா இப்படி பல யோசனைல மக்கள் வெளிவராமல் ஊரடங்கு விதிமுறைக்கு உட்பட்டு வீட்ல இருக்கிறவங்க இப்படி எல்லாத் தளர்வுகளும் வந்தப்பறம் என்ன செய்வாங்க!
கொரோனாவுக்கு இன்னும் பயந்து வீட்டிலேயே இருப்பாங்களா! எல்லா விழிப்புணர்வு பாதுகாப்புகளையும் பின்பற்றி சாதாரண மக்களின் பொதுவாழ்க்கைக்கு ஈடுபட்டு வாழ்வார்களா!
இதற்கான பதில் கொரோனா தொற்று எண்ணிக்கைய பார்த்தா தெரிஞ்சிட போது. மக்களுக்கான நற்செய்தி ஜிம் தொரந்தாச்சு யாருக்கெல்லாம் தொப்பைய குறைக்கனுமா போய் கொறுச்சுக்கோங்க. ஆரோக்கியமான வாழ்வே வளமான வாழ்வு!