பொங்கல் பரிசு தொகையை உயர்த்தியதாக முதல்வர் அறிவிப்பு
தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் சேலம் மாவட்டத்தில் நடந்தன. எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சாரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முதல்வர்.
பொங்கல் பரிசு குடும்ப அட்டைதாரர்களுக்கு சென்ற வருடம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த வருடம் 1500 ரூபாய் சேர்த்து 2500 ரூபாய் வழங்குவதாக முதல்வர் அறிவித்தார்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் தேர்தல் சமயத்தில் சுயநலத்துக்காக இந்த பரிசை வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார் முதல்வர்.
கொரோனா, புயல் காரணமாக இந்த முறை பொங்கல் பரிசு உயர்த்தி கொடுக்கப்படும் என்று பதிலளித்தார். சூழலுக்கேற்ப பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொடுக்கிறோம். இது தவறில்லை இப்படி குற்றம்சாட்ட படுவது நியாயமில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவரை பற்றி பதில் அளித்துள்ளார்.