ஊரடங்கில் தமிழகம் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள்
தமிழகம் முழுவதும் என்ற ஊரடங்கு ஜூலை மாதம் முதல் ஞாயிறு கிழகைகளில் ஊரடங்கு பின்பற்றப்படுகின்றது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்து காணப்படுகின்றது. இதனையடுத்து வாராவாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு பின்பற்றப்படுகின்றது.
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரம் வரை இருந்தது. தற்போது அது அதிகரித்து 6000 ஐ தாண்டியுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தமிழகம் முழுமையாக மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக ஜூலை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகின்றது. அதனையடுத்து தமிழகம் முழுவதும் மார்க்கெட்டுகள் கடைவீதிகள் அனைத்தும் மூடப்படும். மெடிக்கல் பார்மசி, பால் பொருட்கள் மட்டுமே கிடைக்கும்.
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கூட ஞாயிற்றுக்கிழமைகளில் தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே வருவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் ஓட்டல் டீக்கடைகள் செயல்படக்கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை மாதம் ஞாயிற்று கிழமைகளில் ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் அடிப்படையாகத் தேவைப்படும் பொருட்கள் கூட இருக்காது. என்பதுடன் பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ளன. பால் விற்பனை கூட காலை நேரத்துடன் முடித்துக்கொள்ள வேண்டும் என்று தகவல்கள் கிடைக்கின்றன.
ஊரடங்கு போக்குவரத்தை நிறுத்துவதுடன் மனித நடமாட்டத்தை குறைகின்றது. இதன் காரணமாக மக்கள் சற்று அமைதி அடைவார்கள். பொது இடங்கள் அனைத்தும் தனிமைப்படுத்தப்படும் இந்த நாளில் நோய்தொற்று குறைப்பதற்கு இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியமாக இருக்கின்றது. மக்கள் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் முடிந்தவரை வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கின்றனர்.
ஊரடங்கு மூலம் நோய் தொற்று தவிர்க்கலாம். மக்கள் நடமாட்டம் குறைக்கலாம். இதன் மூலம் நோய் பரவல் குறையும். ஞாயிற்று கிழமைகளில் அசைவ விற்பனைகளும் இருக்காது அதனால் கூட்டங்கள் குறையும. மார்கெட்டுகளில் காய்கறிகள் விற்பனை இருக்காது அதனால் மக்கள் நடமாட்டம் குறையும். இதன் காரணமாக மக்கள் வார நாட்களில் தங்களுக்கு தேவையானதைப் வாங்குகின்றனர்.