கொரோனா உச்சத்தில் தமிழகம் 5000 பேர் பாதிப்பு
அடக்கடவுளே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில் உள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 5849 பேர் பாதிப்படைந்துள்ளனர். தமிழ்நாட்டின் உச்சகட்டமான நிலையாகும் இதனால் தமிழகத்தில் மீண்டும் கடினமான சூழல்கள் உருவாகலாம். தமிழ்நாட்டில் 5849 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் சுமார் 1171 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னையில் 90 ஆயிரம் வரை பாதிப்பு உயர்ந்துள்ளது.
சுமார் 2,700 பேர் இதுவரை எந்த வைரசினால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கொரோனா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் மக்களை படுத்தி எடுக்கிறது. அரசும் தனது பங்கிற்கு வீட்டில் அடைத்து வைத்து வெளியில் எங்கும் செல்ல விடாமல் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் அத்தியாவசிய தேவைக்கு வெளியில் வருவது இங்கு தவறாக போகின்றது. அடுத்த அரசு என்ன செய்யும் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.
அதிகரித்துவரும் கொரோனா தொற்று மக்களை கஷ்டப்படுத்துவது உடன் மாணவர்கள் நிலையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி குறியாக இருக்கின்றது. இந்த ஆண்டு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு படிக்கும் மாணவர்கள் நிலை என்னவாகும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. சமூக இடைவெளிகள் அனைத்தும் பயனற்றுக் கிடக்கின்றன.
கொரோனா வைரஸ் தோற்று எண்ணிக்கையும் அதிகரித்துக் போகிறது. இந்த கொரோனா கதையை முடித்து வைக்க அரசின் அடுத்த ஆயுதம்தான் என்னவாக இருக்கும் என்ற கேள்வியுடன் மக்கள் நகர்கின்றனர்.
தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த திருவள்ளூரில் இன்று மட்டும் 430 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் இந்த தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றன. சென்னையை அடுத்த திருவள்ளூரில் இன்று மட்டும் 430 பெயர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாட்டில் மற்ற நகரங்களான கோயமுத்தூரில் 178 பேருக்கு ஒருநாள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தேனியில் 106 பேருக்கு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. நெல்லையில் 120 பேர் திருச்சியில் 213 பேர் வேலூரில் 137 பேர் விழுப்புரம் 105 பேர் விருதுநகர் 363 பேர் என எண்ணிக்கைகள் பெருகிக்கொண்டே போகின்றன. மக்களைப் பாதுகாக்க வேண்டிய பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை அரசும் தன் பங்கிற்கு செய்து வருகின்றது ஆனால் இந்த ஆட்கொல்லி நோய் நம்மை விட்டு செல்லாமல் படுத்து எடுக்கின்றது