தமிழ்நாடு பட்ஜெட் 2023 – 2024
தமிழ்நாடு அரசின் நடப்பு ஆண்டுக்கான 2023- 2024 நிதிநிலை அறிக்கையை தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழக பட்ஜெட்டில் இன்று அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை கொடுத்துள்ளோம்.
தமிழக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ள காலை உணவு திட்டம் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை உணவு திட்டம் கொண்டு வருவதன் மூலம் தமிழகத்தில் இருக்கும் 18 லட்சம் மாணவர்கள் காலை உணவு என்பது சாப்பிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அறிவிப்பு பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் இதன் செயல்பாடுகளுக்கு பின்பு தான் அனைத்தும் முழுமையாக புரியும் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியானது ரூபாய் 500 கோடி ஆகும்.
தஞ்சையின் சோழர் பெருமையை உலகம் போற்ற அருங்காட்சியகம் அமைக்கப்பட அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன
மதுரை மாநகரத்தை வளர்ச்சி நகரமாக மாற்றி இன்று மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க நிதி அமைச்சர் தனது அறிவிப்பை தெரிவித்துள்ளார் இதற்கான ரூபாய் 8500 கோடி செலவு செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்படும். ரூபாய் 7000 கோடி இதற்காக ஒதுக்கீடு செய்யப்படுவதாக இந்த ஆண்டு நிதிஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் போன்ற மாநகராட்சிகளில் இலவச வைப்பு சேவைகள் வழங்க இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை, வனத்துறை போன்ற துறைகள் பள்ளிகல்வி துறைகளின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
ரூபாய் 880 கோடி மதிப்பீட்டில் 111 ஏக்கர் அளவில் ஜவுளி பூங்காவை சேலத்தில் அமைக்க அருவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது இந்த பூங்காக்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது
சென்னையில் அடையார் வழியாக கூவம் ஆறு செல்கின்றது அதனை மேம்படுத்த ரூபாய் 1500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் கூவம் ஆற்றின் நீர் வழிகள் தூய்மைப்படுத்தும் திட்டம் செயல்பாட்டில் கொண்டு வரப்பட உள்ளது