டிஎன்பிஎஸ்சி தமிழ்பாட வினா விடை
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் மொழிப்பாடப்பகுதிக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடைகளை இங்கு தொகுத்து கொடுத்துள்ளோம். அவற்றை நன்றாகப் படிக்கவும். தேர்வில் அதிக மதிபெண்கள் பெற வேண்டும் என்ற உத்வேகமுள்ளவர்கள் மொழிப்பாடத்தில் கவனம் செலுத்தி முழு மதிபெண்கள் பெற்றுள்ளனர்.
“அறம் அறக் கண்ட நெறிமான் அவையம்” என குறிப்பிடும் நூல் எது?
விடை: புறநானூறு
விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
விடை: 3
தொல்காப்பிய எழுத்ததிகாரம் எத்தனை இயல்களை கொண்டது?
விடை:9
ஓர் எழுத்து ஓர் மொழியில் உள்ள மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை?
விடை: 42
கொன்றைக்குழல், முல்லைக் குழல், ஆம்பல் குழல் என பல வகையான குழல்கள் இருந்ததாக கூறுவது?
விடை: சிலப்பதிகாரம்
மேலும் படிக்க : TNPSC தேர்வு குறிப்புகள்
இலக்கண முறைப்படி சொற்களின் வகைகள் எத்தனை?
விடை 4
நீதிநெறி விளக்கம் நூலில் கடவுள் வாழ்த்து உட்பட எத்தனை வெண்பாக்கள் உள்ளன?
விடை 102
ஆலங்குடி சோமு தமிழ்நாடு அரசின் —–விருது பெற்றார்.
விடை: கலைமாமணி
எழுவாய் தனித்து நின்று இயல்பான பொருளை தருவது ——ஆகும்.
விடை: முதல் வேற்றுமை
தமிழ் என்ற சொல்லிலிருந்து தான் திராவிட என்ற சொல் பிறந்தது என்று கூறியவர் யார்?
விடை: ஹீராஸ் பாதிரியார்
மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு வினா விடை