போட்டித் தேர்வுக்கான தமிழ் பாட குறிப்புகள்
கதை
கதை சொல்லும் பழக்கம் எப்போது ஆரம்பமானது. ஆதிமனிதன் தனது அனுபவத்தை அடுத்த வருடம் விவரிக்கும்போது கதை சொல்லும் பழக்கம் ஆரம்பமானது. கதையானது உவமை மற்றும் வருணனைகளோடு வடிவம் பெறும் தமிழ் மரபு கதைகள் வாய்மொழியாக செல்லப்பட்டு பின் உரைநடையாக வந்தன.
சிறுகதைகள் ஆக்கம்
தமிழ் சிறுகதையின் முன்னோடி களாக க.நா பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், மௌனி, இராஜகோபாலன், சிதம்பர சுப்பிரமணியன் போன்றோர் எழுதினார்கள். மணிக்கொடி சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. மணிக்கொடி இதழின் அகிலன், நா பார்த்தசாரதி, கதை எழுதினார் இரண்டாம் தலைமுறை புதுமைப்பித்தனை தொடர்ந்து லாசா ராமாமிர்தம், கா. நா சுப்பிரமணியம், எம். வி வெங்கட்ராம், ஆர் சண்முகசுந்தரம் ஆகியோர் சிறந்து விளங்கினார்கள்.
கதை எழுதுவதில் மூன்றாம் தலைமுறையாக அழகிரிசாமி, நகுலன் ஜானகிராமன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ஆகியோர் படைப்புகள் மனித பண்பு நலன்கள் நுட்பமாக வெளியிட்டனர்.
மேலும் படிக்க: டிஎன்பிஎஸ்சி இந்திய வைசிராய்கள் வினா-விடை
சிறுகதை வடிவமைப்பு
சிறுகதை என்பது ஒரு புது இலக்கிய வடிவம் ஆகும். சமூகத்தில் உள்ள கருத்துக்களை நம்பிக்கைகளை வலியுறுத்தும் போக்கு கொண்டது. இந்த புது இலக்கியம் சமூக கருத்துக்களை மறுத்தும் அதற்கேற்றார்போல் பயன்படுத்தும் போக்கு கொண்டது.
சிறுகதைகளுக்கு என்று ஒரு தனி வடிவம் உள்ளது. சிறுகதை போக்கு ஒருமை கொண்டது. மேலும் நேருக்கு நேரான விவரங்கள் இருக்கும். சிறுகதையின் முடிவில் எதிர்பாராத ஒரு முடிவாக இருக்க வேண்டும். கற்பனைக்கு எட்டாததாக இருக்க வேண்டும். வாசகரை கற்பனையில் மிதக்க வைத்தது சிறுகதைக்கு முக்கிய பங்களிக்கின்றது.
வாசகரின் கற்பனையைத் தூண்டுதல்
சிறுகதைக்கு காலம், களம் மற்றும் சூழல், கதாபாத்திரங்கள், குணம் வாசகர்களுக்கு புரிந்து கொள்ளும் வடிவமைப்பு ஆகியவை அவை முக்கியத்துவம் பெறுகின்றன கதை முடிச்சு கதையின் போக்கு முக்கியத்துவம் பெறுவதாகும். வாசகரின் மோகத்தில் கதை போக்கும் போக்கும் திருப்பம் பெறுவது அதன் முக்கியமான படைப்பாற்றல் என்று சொல்லலாம்.