டிஎன்பிஎஸ்சி தமிழ்பாட முந்தைய ஆண்டு வினா விடை
டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட வினா விடை இங்கு கொடுத்துள்ளோம். வினா விடைகளை தினசரி படிக்கவும். தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்கும் பொழுது எந்தப் பாடத்தில் எது முக்கியம் என்பது தெளிவாகத் தெரியும். தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பான விடைகள் கொடுக்க முடியும்.
தமிழ் மாதின் இனிய உயிர்நிலை எனப் போற்றப்படும் நூல்?
விடை: திருக்குறள்
தண்டமிழ் ஆசான் என அழைக்கப்பட்டவர் யார்?
விடை: சீத்தலைச் சாத்தனார்
முதல் சமயக் காப்பியம் எது?
விடை: மணிமேகலை
திருக்குறள் நெறியை பரப்புவதை தம் வாழ்நாள் கடமையாக கொண்டவர் யார்?
விடை:குன்றக்குடி அடிகளார்
“உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய்” என்று கூறியவர்?
விடை: பாரதிதாசன்
ஜென் என்னும் ஜப்பானிய மொழி ச் சொல்லுக்கு——- என்பது பொருள்.
விடை: தியானம் செய்
அப்துல்கலாமுக்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் எது?
விடை: திருக்குறள் விளக்குகள் பல தந்த ஒளி
உலகிலேயே முதன் முதலாக சவுதி அரேபியா ஒரு ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது அந்த ரோபோவின் பெயர் என்ன?
விடை: சோபியா
வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தில் கண்டு தெளிவோம் என்ற பாடலை பாடியவர் யார்?
விடை: பாரதியார்
“தமிழ்நாடு” என்ற சொல்லை முதலில் கையாண்ட நூல் எது?
விடை: சிலப்பதிகாரம்
அகர வரிசையில் அறிவுரைகளை கூறும் இலக்கியம் எது?
விடை: ஆத்திசூடி
இந்திய அரசின் தாமரைச்செவ்வனி விருது பெற்ற இந்திய பெண்மணி யார்?
விடை: பால சரஸ்வதி