கல்விகுரூப் 1குரூப் 2கேள்வி-பதில்டிஎன்பிஎஸ்சிதேர்வுகள்போட்டித்தேர்வுகள்

போட்டித் தேர்வுக்கான தமிழ் வினா விடைகள்

போட்டித் தேர்வுக்கான வினா விடைகளை இங்கு கொடுத்துள்ளோம். தமிழ் பாடத்தில் கேட்கப்பட்டுள்ள முந்தைய ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளை இங்கு கொடுத்துள்ளோம்.

செம்மை சான்ற காவிதி மாக்கள் என்று அமைச்சர்களை போற்றுபவர் யார்?
விடை: மாங்குடி மருதனார்

காருகர் என்ற சொல்லின் பொருள்?
விடை: நெய்பவர்

எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதே சமத்துவமாகும் என்று ஜனநாயகத்துக்கு அரியதொரு விளக்கம் தந்தவர் யார்?
விடை: அம்பேத்கர்

சிறகடித்த வானம்பாடி களுக்கு முதல் எழுத்தாகவும் தலையெழுத்தாகவும் இருந்தவர் யார்?
விடை: பாரதிதாசன்

மேலும் படிக்க : பிற்காலக் காப்பியங்களின் குறிப்புகள்!

பகைவரின் செருக்கை அறுக்கும் உறுதியான படைக்கலாம் எது?
விடை:பொருளைத் தேடி சேர்த்தல்

நல்ல தமிழ் எழுதவேண்டுமா? என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை: அ.கி. பரந்தாமனார்

“நச்சரவம்” என்பதன் பொருள்?
விடை: விடமுள்ள பாம்பு

“அமுதும் தேனும்” என்ற நூலின் ஆசிரியர்?
விடை:சுரதா

‘மணநூல்’ என்று அழைக்கப்படுவது?
விடை: சீவக சிந்தாமணி

நல்லாதனார் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?

விடை: திருநெல்வேலி

மேலும் படிக்க : டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *