டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான தமிழ் குறிப்புகள்!

டிஎன்பிஎஸ்சி  போட்டி தேர்வுகளை வெல்ல நன்றாக படிக்க  தொடங்கியிருப்பீர்கள் எதையும் திட்டமிட்டு செயல்படுங்கள். ஒரு மனதாக  உறுதியாக முயற்சி  செய்தால் முயற்சி திருவிணையாகும். 
வெற்றி  பெற கடுமையான உழைப்பும் புத்திசாலிதனமும் அவசியம் ஆகும். அது ஒன்றே உங்களை வளப்படுத்தும்.  போட்டி தேர்வு கனவில் வெற்றி என்ற இலக்கினை விட முதலிடம் பெற வேண்டும் என்ற  குறிக்கோளுடன் படிக்க வேண்டும். உறுதியான முடிவுடன் படிக்கும் பொழுது வெற்றி உறுதியாகும்.  தமிழ் மொழி குறிப்புகள் குறித்தும்

சார்பெழுத்துக்கள்: 

தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் மெய் எழுத்துக்கள் பதினெட்டும் தனித்தியங்கி முதன்மை பெற்று விளங்குவதால் அவற்றை முதலெழுத்துகள் என்கிறோம். 
முதலெழுத்துக்களை சார்ந்து வரும் எழுத்துக்களை சார்பெழுத்துக்கள் என அழைக்கின்றோம். உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் பிரிந்து உயிர்மெய் எழுத்தாக  பிறந்தது. 

எடுத்துக்காட்டு: உடல்: ‘ ட’ என்பது உயிர்மெய் எழுத்து ‘ல்’ என்பது மெய்யெழுத்து ஆகும். ட்+அ= ட,  ட் என்னும் மெய் எழுத்தும் அ என்னும் மெய் எழுத்தும் சேர்ந்து,  என்னும் உயிர்மெய் எழுத்துக்களும்  உயிரையும் மெய்யும் சார்ந்து வரும்.  

சார்பெழுத்துக்களின் வகைகள்: 

சார்பெழுத்துக்கள் பத்து வகைப்படும்உயிர்மெய்  ஆய்தம், உயிரளப்படை,ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம்,மகரகுறுக்கம்,ஆய்த குறுக்கம்,எனச் சார்பெழுத்துக்கள் பத்து வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

வினா: 

1. சார்பெழுத்துக்களின் வகைகள் யாவை?

2. சார்பெழுத்துக்களுக்கான எடுத்துகாட்டுகள் உருவாக்கி விளக்குக?

3. உயிர் எழுத்து , உயிர் மெய் எழுத்து என்றால் என்ன?

4. முதலெழுத்துகள் என்றால் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *