டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி தேர்வினை வெல்ல தமிழ் பாட குறிப்புகள்!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெல்லும் கனவுடன் படித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் போட்டி தேர்வில் மொழி பாடத்தில்  தமிழ் பாடத்தின் முக்கியத்துவம் குறித்து  கடந்த பதிவில் சிலேட் குச்சி மூலம் கூறியிருந்தேன். அதன் முழு பரிணாமம் வெற்றி பெறுவது குறித்த அடுத்தடுத்த பதிவுகளில் முழுமையாக தெரிந்து கொண்டு படியுங்கள்.

வெற்றி நிச்சம் அதுவே உங்கள் லட்சியம்கொள்கை வெல்வதே நீங்கள் கொண்டிருக்க வேண்டிய லட்சியமாகும்.
டிஎன்பிஎஸ்சி பாடப்பகுதியில் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறனுமா அதுக்காக  இலக்கணம், இலக்கியம் இரண்டையும் தெளிவாகப் படித்து பயிற்சி செய்து நினைவில் வைக்க  வேண்டும். மேலும் படித்த பாடங்களை  திரும்பி நினைவில் வைத்து பயிற்சி செய்தல் சிறந்தது ஆகும்.  

 1. செய்யப்படும் பொருளும், வினையெச்சமும் வரும் பொழுது  முதலில் செய்யப்படும் பொருள வரும்எ.கா: இராமன் வில்லை வளைத்துப் புகழ் பெற்றான்  அவன் பெண்ணைக் கொடுத்துத் திருமணம் செய்வித்தான் 
2. வேற்றுமை உறுப்புகளான 2- ஐ, 3-ஆல், 4- கு, 5-இன், 6-அது, 7-கண் உள்ளன இவற்றில் முதல்  உறுப்புக்கும், எட்டாம் வகுப்புக்கும் உருபு இல்லை.  
3. எழுத்து தனித்தோ தொடர்ந்தோ வந்து பொருள் தரின் அது பாதமாம்  சொல் எனப்படும்.  சொல்: இயற் சொல், திரிச்சொல்,  திசை சொல், வடச்சொல்

இயர் சொல்: பொருள் அறியும்படி இருக்கும் சொல் அனைவருக்கும் தெரிந்திருக்கும். சொல், கண், காது, மண்
திரிச்சொல்: படித்தவர்கள் மட்டுமே அறிந்தவை கிளி, கிள்ளை, தந்தைவடசொல்: அற்புதம், முகூர்த்தம், கல்யாணம் , சுந்தரம் 
4. பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என வகைப்படுத்தப்படும். பெயர்ச்சொல்: ஒரு பொருளை குறிப்பதுவினைச் சொல்:  ஒரு பொருளின் அசைவைக் குறிப்பதுஇடைச் சொல்: பெயரையும், வினையையும் சார்ந்து வருவதுஉரிச்சொல் : பெயரடை, வினையடியச் சொல்லாய் பெரும்பாலும் செய்யுளுக்கே உரிய சொல்லாய் வருவது ஆகும். 
5. இடுகுறிப்பெயர் – காரணம்  தெரியாமல் ஒரு பொருளுக்கு இட்டு வழங்கிய பெயர்  இடுகுறிப்பெயர் ஆகும். எடுத்துக்காட்டாக  வீடு, கல், சுவர், பல் போன்றவையாகும். 
6. காரணப் பெயர்- காரணத்தோடு பெயர் வைத்து அழைக்கப்படும் பெயர் காரணப் பெயர் ஆகும். எடுத்துக்காட்டாக மயிலாடுதுறை, வளையல், அணி, பூண், எழுதுகோல், எழுத்து எழுதப்படுவதால் அது எழுத்து என வழங்கப்பட்டது. மண்ணுடன் மருவி நிற்பதால் மரம் ஆகும். மேலும் மரத்தை இடுகுறிப் பெயர் என அழைப்பாரும் உண்டு. 

இடுகுறிப் பொதுப் பெயர்ஒரு சொல்லாக இருக்கும்மண்நீர்இடுகுறிச் சிறப்பு பெயர்இரண்டு சொல்லாக இருக்கும்சரளைமண், களிமண்வெந்நீர், கடல் நீர்
காரணப்பொதுப் பெயர்மரம்அணிகாரணச்சிறப்புப் பெயர்பனைமரம், மாமரம், பலாமரம், வளையல்

7. காரணப் இடுகுறிப் பெயர்= நாற்காலி, முக்கண்ணன், கலைஞர்(கலையில் வல்லவன்)
பேராசிரியர் (பெரிய பெருமையுடைய ஆசிரியர்/ பெரியவர்)நாற்காலி – நான்கு கால் இருப்பதால் நாற்காலி எனபெயர் பெற்றது. எனவே காரணப் பெயர் ஆகும். 
8. பொருட்பெயர்: கிளைப் பெயர்- தமன், தமர்எண்ணுப் பெயர்- ஒருவன், ஒருத்தி, ஐவர் எண்ணுப் பெயர் = ஒன்று, இரண்டு…                          எண்ணுப் பெயர்= ஒன்று, இரண்டு….                          எண்ணியபெயர்= ஒருவர், இருவர்….                              குழுப் பெயர்= அமைச்சர், திருடர் என  வரும்.                           முதற்பெயர்= பொன்னன், முடியன், சடையன், வீடு, மரம்
9. இடப்பெயர்:இடத்தை குறிக்கும் பெயர்கள் இடப் பெயர் என வழங்கபடும். குறிஞ்சி என்பது இடப் பெயர் ஆகும் அது திணை அடிப்படையில் வரும். இந்தியா என்பது  இடப் பெயர் ஆகும் இவ்வாறு இடப் பெயரில் வருகின்றது. 
10. காலப் பெயர் : 

ஆண்டு பெயர்18 வயதான்
பருவப் பெயர்கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்
மாதப் பெயர்சித்திரை, வைகாசி,,,,,
நாள், பெயர்அசுவினி, பரணி, கிருத்திகை…
கிழமை, வாரம்திங்கள், செவ்வாய்
நேரம்மணி, விநாடி, நொடி, யுகம், ஒளி ஆண்டு

11. சினைப்(உறுப்பு) பெயர்: கண், செங்கண், தோள், திண்தோள், பொருட்பெயர், முதற் பெயர் என்பது உறுப்புகள் பல ஒன்று சேர்ந்து  வருவதாகும். 
12. குணப்பெயர்/ பண்புப் பெயர்- மை போன்ற விகுதிகளைப் பெற்று வரும் சொல்மை- நன்மை, சி- மாட்சி, ஐ- தொல்லைபு- மாண்புவு- மழவுகு- நன்குறி- நன்றிறு- நன்றுநர்- நன்நர்
வினா விடை: 

1.  வடசொல்லிற்கான எடுத்துக்காட்டுகள்  யாவை?

2.  கலைஞன் என்றால் என்ன?

3. முதற் பெயர் என்றால் என்ன?

4. இடுகுறிச் சிறப்பு பெயரில் எத்தனை சொல் இருக்கும்?

5. காரணம் தெரியாமல் ஒரு பொருளுக்கு  பெயர் இட்டு அழைக்கப்படுவதனை எவ்வாறு அழைக்கின்றோம்?

6.  சொல் என்றால் என்ன?

7.  வேற்றுமை உறுபு 5 ஆம் உருபு யாது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *