செய்திகள்தமிழகம்

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்..முழு பார்வை..!

தமிழக அரசு இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் என்பதை விரிவாக பார்க்கலாம்

குடியானவன் வீட்டுக் கோழிமுட்டை அதிகாரி வீட்டு அம்மியாலும் உடையாத அளவுக்கு அவர்கள் வாழ்வு சமூக, பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும் என்பதற்காகவே வேளாண் நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் ..

⭐மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க, விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்படும்

⭐”பசுமைக்குடில், நிழல்வலைக்கூடம் போன்ற உயர் தொழில்நுட்பங்களுக்கு ₹25.9 கோடி ஒதுக்கீடு”

⭐முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட்டுகள் திட்டத்திற்காக 3,000 பம்பு செட்டுகளுக்கு ₹65.34 கோடி ஒதுக்கீடு

⭐”டெல்டா பகுதிகளில் பாசன கால்வாய்களை தூர்வார ₹80 கோடி நிதி ஒதுக்கீடு

⭐கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ₹195 வழங்கப்படும்; கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ₹2950

⭐கரும்பு சாகுபடிக்கு உதவியாக ₹10 கோடியில் உபகரணங்கள் வழங்கும் திட்டம்

⭐”வேளான் சந்தை மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க ₹16 கோடி நிதி ஒதுக்கீடு

⭐விவசாயிகளுக்கு வழிகாட்ட தமிழ் மண்வளம் என்ற இணையதளம் உருவாக்கப்படும்

⭐”இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ₹400 கோடி ஒதுக்கீடு”

⭐கைபேசியால் இயக்கப்படும் பம்பு செட்டுகள்

⭐மாலை நேரத்திலும் உழவர் சந்தைகள் செயல்பட வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு

⭐உழவர் சந்தைகளில் மாலை நேரத்தில் சிறுதானியங்கள் விற்பனை செய்யவும் நடவடிக்கை

⭐”3 மாவட்டங்களில் மொத்த காய்கறி விற்பனை மையங்கள் அமைக்கப்படும்”

⭐“விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் பனை மரக்கன்றுகள் வழங்கப்படும்”

⭐₹8000 மானியத்தில் இடுபொருட்கள் தக்காளி விவசாயிகளுக்கு வழங்கப்படும்”

⭐இலவச மின்சாரம் வழங்க ₹5,157 கோடி ஒதுக்கீடு

⭐தமிழகத்தில் “3 உணவுப்பூங்கா அமைக்கப்படும்”

⭐விவசாயிகள் இடுபொருட்களை எடுத்துச் செல்லவும் விளை பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்லவும் கிராம பஞ்சாயத்துகளில் ₹604.73 கோடி செலவில் 2750 கி.மீ நீள சாலைகள் அமைக்கப்படும்

⭐ தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க 37 தேனீ தொகுப்புகள் ₹8.51 கோடி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்

⭐திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (டான்சிகோ) மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு ஏற்ற விலையைப் பெறுவதை உறுதி செய்யும் வகையில் விவசாயப் பொருட்களுக்கான தொழிற்பேட்டை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *