போட்டித் தேர்வுக்கான மொழிப் பாடம்
போட்டித் தேர்வுக்கான பாடத்தை நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் போட்டித்தேர்வில் அதிகமதிபெண்கள் பெறுவதற்காக மெனக்கெடல் இருக்கும். அரசு வேலைவாய்ப்புக்கு நாம் எழுதும் தேர்வில் வெற்றிப் பெற வேண்டும்.
1. இராம காதை என்ற அடைமொழி குறிக்கும் நூல்
விடை: இராமாயணம்
2. தமிழ்தாத்தா என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: உ.வே.சாமிநாதய்யர்
3. இசை ” சொல்லுக்கா எதிர்சொல் என்ன
விடை: வசை
4. மரபுப் பிழைகள் வழூஉச் சொல்லைக் கண்டுபிடி
வண்டலூரில் புலிக் குட்டியைப் பார்த்தேன்
வண்டலூரில் புலிக் குருளையைப் பார்தேன்
வண்டலூரில் புலிக் கன்றைப் பார்த்தேன்
விடை: வண்டலூரில் புலிக் குட்டியைப் பார்த்தேன்
5. நடந்தான் வேர்சொல்லை தேர்வு செய்க
விடை: நட
6. ‘ஒரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிக- ‘மோ”
விடை: முகர்தல்
7. வேர்ச்சொல்லை தொழிற்பெயராக்குக குத்து
விடை: குத்தல்
8. ‘ஆடு” என்பதன் தெரிநிலை வினைமுற்று
விடை: ஆடுகின்றான்
9. பொரிகடலை இலக்கணக் குறிபெழுதுக-
விடை: உம்மைத் தொகை
10. இன்சொல் -இலக்கண குறிப்பு தருக்க
விடை: பண்புத்தொகை
11 ‘இராப்பகல்” – இலக்கணக் குறிப்பெழுதுக
விடை: உம்மைத் தொகை
12. அவன் துணியை நனைத்தான் எவ்வகை வாக்கியம் கண்டுபிடிக்க
விடை: தன்வினை வாக்கியம்
13. கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம் போன்றவர்கள் வினா வாக்கியம் அமைக்க?
விடை: கல்வி இல்லாத பெண்கள் எதைப் போன்றவர்?
14. கண்ணை கவரும் நீல நிற ஏரிகள் எவ்வகை வாக்கியம் ஆகும்
விடை: உணர்ச்சி வாக்கியம்
15. சரவணன் பாடம் படித்தான் இவை எவ்வகை வாக்கியம் ஆகும்
விடை: தன் வினை வாக்கியம்