போட்டித் தேர்வர்களுக்கான தமிழ் குறிப்பு
தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கான தமிழ் மொழி வினா விடைகள் கொடுத்துள்ளோம். அதனைப் படித்து பயிற்சி செய்து மொழிப்பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற முயற்சி செய்யுங்கள் மிகவும் நுணுக்கமானது ஆகும். அதனை சரியாக படித்து முறையாக மாதிரி தேர்வு செய்து பயிற்சி செய்யும்போது அதிக மதிப்பெண்கள் கிடைக்கப் பெறலாம்.
உயிரெழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் தனித்து இயங்கி முதன்மை பெற்று விளங்குவதால் எவ்வாறு அழைக்கின்றோம்?
விடை முதல் எழுத்துக்கள்.
சார்பு எழுத்துக்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்?
விடை பத்து வகைப்படும்
ஏரி குளம் வாய்க்கால் முதலியவற்றின் கரைகளில் மண்ணரிப்பைத் தடுக்க மேலும் அதன் உறுதித்தன்மையை பாதுகாக்க நடப்பட்ட மரங்கள் எவை?
விடை பனை மரங்கள்
தமிழகத்தின் சிறப்பு மரமாக கருதப்படுவது எது?
விடை பனைமரம்
முப்புள்ளி, முப்பாற்புள்ளி என அழைக்கப்படுவது எதனால்?
விடை: உயிரோடு மெய்யோடு சேராமல் தனித்து இருப்பதால் தனிநிலை எனவும் அழைப்பர்
எந்த காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்கு குறியீடாக இட்ட பெயர் எது?
விடை: இடுகுறி பெயர்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அழகிய சொக்கநாதர் எது பாடுவதில் வல்லவர்?
விடை: சிலேடை பாடுவதில் வல்லவர்
இந்தியாவின் நாட்டு பண்ணை குறித்து எழுதிய ரவீந்திரநாத் தாகூர் பெற்ற பரிசு பெயர் எது?
விடை: இலக்கியத்திற்காக கீதாஞ்சலி என்ற தொகுப்பிற்கு 1913 நோபல் பரிசு பெற்றார்
ஆசியாவிலேயே முதல்முறையாக நோபல் பரிசு பெற்றவர் கவிஞர் யார்?
விடை :ரவீந்திரநாத் தாகூர்