நோயை விரட்டனுமா? வாரம் மூன்று முறை கொடுங்க!
உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு உணவில் அடிக்கடி பட்டாணியை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். போலிக் அமிலம் அதிகம் இருப்பதால் செல்களுக்கு உள்ளே மரபணுத் தொகுப்பு இயக்கம் சீராக நடக்க இந்த அமிலம் தேவைப்படுகிறது.
- சளிச் சவ்வுப் படலத்தின் ஆரோக்கியம்.
- சரும ஆரோக்கியம்.
- தெளிவான பார்வைக்கும் உதவுகிறது.
தேவைக்கேற்ப எடுத்துக் கொண்டால் பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்பு மண்டலக் குறைபாடுகள் வராது. வைட்டமின் ஏ சரியான விகிதத்தில் அடங்கியிருப்பதால் சளிச் சவ்வுப் படலத்தின் ஆரோக்கியத்துக்கும், சரும ஆரோக்கியத்திற்கும், தெளிவான பார்வைக்கும் உதவுகிறது.
பச்சைப் பட்டாணி
பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் தேன் முதலியவற்றைக் கூட உண்ணாத உணவு பழக்கம் உள்ளவர்களின் புரதத் தேவையை ஈடுகட்ட பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தரமான போதுமான புரதச்சத்து கிடைக்கும். தினமும் சிறிய அளவில் பட்டாணியை நமது உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தரும்.
பலவிதமான சத்துக்கள்
பட்டாணியை வாங்கும் போது கலப்படம் குறித்து ஆய்வு செய்து வாங்க வேண்டும். கேரட்டையும், பட்டாணியையும் மசித்துக் கொடுக்கும் போது பலவிதமான சத்துக்கள் அடங்கியுள்ளன. உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கக் கூடியது. சத்துக்கள், வைட்டமின்கள் அதிகம் காணப்படுகின்றன. பீன்ஸ், தட்டைப்பயறு ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது பட்டாணியில் கலோரிகள் குறைவு 100 கிராம் பட்டாணியில் 81 கி கலோரிகள் நிறைந்து காணப்படுகின்றன.