குளிர்காலத்தில் செரிமானத்தை சீராக வைத்துக்கொள்ள வேண்டுமா?
குளிர்காலம் ஆரம்பித்து விட்டன. குளிர் அதிகரிக்க, அதிகரிக்க உடல் வெப்பத்தை தக்க வைத்துக்கொள்ள என்னும். உடலின் மெட்டபாலிசம் குறைய ஆரம்பிக்கும். உடல் உழைப்பு குறைவதால் சாப்பிடும் அனைத்து கலோரிகளும் உடலில் சேர்ந்து உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. உடல் உழைப்பு இல்லாததால் செரிமான சக்தி குறைய ஆரம்பிக்கிறது.
- உடல் உழைப்பு இல்லாததால் செரிமான சக்தி குறைய ஆரம்பிக்கிறது.
- குளிர்காலத்தில் சூடான பானங்களை அருந்த தோன்றும்.
- தேவையான கலோரிகள் சேர்வதை தவிர்க்க சரியான உணவுகளை சரியான அளவில் எடுத்துக் கொள்வது அவசியம்.
அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம்
குளிர்காலத்தில் சூடான உணவு, டீ, காபி போன்ற சூடான பானங்களை அருந்த தோன்றும். காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியாது. அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் இருப்பவர்கள் குளிர்காலத்தில் எழுந்திரிக்க சிரமப்பட வேண்டும். இந்த குளிர் காலத்தில் நாம் உண்ணும் உணவுகள் சூடாக இருந்தாலும் அவை சரியாகச் செரிமானம் ஆகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
கலோரிகள் சேர்வதை தவிர்க்க
தேவையான கலோரிகள் சேர்வதை தவிர்க்க சரியான உணவுகளை சரியான அளவில் எடுத்துக் கொள்வது அவசியம். குளிர்காலத்தில் நெய் சேர்த்துக் கொள்வதால் நல்ல பாக்டீரியாக்கள் உருவாக்க உதவுகிறது. சுத்தமான நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இதிலிருந்து கரையக்கூடிய வைட்டமின்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
செரிமான சக்தியை அதிகரிக்க
உடலில் உருவாகும் நல்ல பாக்டீரியாக்கள் செரிமான சக்தியை அதிகரிக்கும். உடலில் ஹார்மோன் சமநிலைபடுத்துவதோடு நல்ல கொழுப்பை கொண்டுள்ளதால் சருமத்தை பளபளப்பாக்க உதவுகிறது. ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்சனைகளுக்கு சிறந்த உணவாக அமைகிறது.
செரிமானத்தை எளிதாக்க
காய்கறிகளில் நார்ச்சத்து மிக்க காய்கறிகள் செரிமானத்தை எளிதாக உதவுகிறது. இதனால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். முள்ளங்கி, பீட்ரூட், கேரட் போன்ற வேர் காய்கறிகள் உடலுக்கு நல்லது.
கீரை வகைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. செரிமான சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அடிக்கடி நொறுக்குத்தீனிகள் சாப்பிட தூண்டுவது இதனால் தடுக்கப்படுகிறது. கீரைகளை சூப் செய்து சாப்பிடலாம்.