வாழ்க்கை முறை

உங்க வீட்டு சுட்டீஸ்கள, பட்டூஸ்களா மாத்துங்க!

வீட்டில் வளரும் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டிய பொறுப்பில் பெற்றோர்களும், பள்ளி, சமுதாயமும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. இதனை  உணர்ந்து அனைவரும் சமுதாயத்தில் கடமையை சரிவர செய்ய வேண்டியது அவசியம் ஆகும். குழந்தை பெற்றோர் பேச்சை கேட்க வேண்டுமா கிழே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்  பின்பற்றி செயல்படுங்க அதுபடியே நீங்களும் நடங்க, சொல்லி கொடுங்க பிள்ளைகள் உங்களையே  பின்பற்றுவார்கள். 

காலை முதல் மாலை வரை:

குழந்தைகளுக்கு பெற்றோர்கள் காலை முதல் மாலை வரை வீடு, படிக்கும் பள்ளி, மாலையில் விளையாட்டு நேரம், இடம்,  ஸ்பெஷல் டியூசன் போன்ற வகுப்பு போன்ற அனைத்து இடங்களிலும்  செய்ய வேண்டியது கற்றுக் கொடுக்க வேண்டும். கற்று கொடுப்பது போல் பெற்றோர்கள் பிள்ளைகள் முன்பு நடந்து கொல்ல வேண்டும். சொல்வது ஒன்று செய்வது ஒன்று என இருந்தால் உங்கள் பிள்ளைகளை மாற்றுவது நடைமுறைச் சிக்கல் ஏற்படும் ஆகையால்  அவர்களுக்கு கற்று   கொடுப்பத்தை நீங்கள் முதலில் பின்பற்றுங்கள் அப்புறம் பாருங்க, உங்க வீட்டு சுட்டீஸ் எவ்ளோ க்யூட் பட்டூஸ் மாறி ஆகுறாங்கன்னு.

பேச்சில் கவனம், கேட்டலில் கவனம்:

உங்கள் பிள்ளைகள் முன்பு பேச வேண்டியது மற்றும் பேசக்கூடாததது எது என்பது பெற்றோர்கள் தெரிந்திருக்க வேண்டும். அதுபடியே வீட்டில் உள்ள பெரியோர்களும் பேச வேண்டும். நீங்கள்  சார்ந்த சமுகத்தில் பேசப்படும் வார்த்தைகள் ஆகியவற்றையும் கவனிக்க வேண்டியது அவசியம். உங்கள் பிள்ளைகள் அவற்றின்  நேர்மறையான  சொற்களை கேட்டு, பார்த்து செயல்படுபவர்களாக  இருக்க வைக்க வேண்டியது பெற்றோர்கள் கையிதான் அதனை உணருங்கள். எதனையும் நம்பிக்கையோடு பேசுங்கள், நல்ல சொற்களை பேச  கற்றுக் கொடுங்கள்.

எதிர்மறையான சொற்கள் பேசினாலோ அல்லது செயல்பாட்டில் மாற்றம் தெரிந்தாலோ சுட்டிக்காட்டுங்கள் அவர்கள் அதனை ஏற்று செயல்படும் வரை, அதற்கான வழிகளில் அவர்களை அனுகுங்கள். குழந்தை எப்பவும் கெட்டது பேச மாட்டங்க என்ன கேட்டாலும் அத அப்படியே பேசுவாங்க, சோ பீ அலர்ட் பேரண்ட்ஸ், கதை சொல்வது, பாட்டு  சொல்லிக் கொடுப்பது, பெரியோர்களிடம் பேசும் முறை ஆகியவற்றை சொல்லிக் கொடுங்கள் அதுபடியே  செயல்பட தூண்டுங்கள் குழந்தைகள் நல்ல கேட்டு, பார்த்து செயல்பட வைக்க வேண்டியது பெற்றோர்கள் பொறுப்பு. 

 பெற்றோர்கள் கற்க வேண்டியது: 

நீங்க பெற்றோர்களா அப்படினா நீங்கள் முதல்ல நிறைய கத்துக்கனும் மற்றும் மாறனும், பயிற்சி  செய்யனும், கணவன் மனைவியான நீங்கள் உங்களிடம் உள்ள ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல், அன்பு, அமைதி காத்தல், நிதானமாக செயல்படல், போராட கற்றுக் கொடுத்தல், முரண்பாடுகளை  அமைதியாக நிதானமாக எதிர் கொள்ளும் பொழுது உங்களைப் பார்த்து வளரும் பிள்ளைகளும் அதுபடியே  செயல்படும்.  பெற்றோர்கள் பக்குவமாக, தைரியமாக அக்கறையுடன் நடந்து கொண்டால் பிள்ளைகளும் உங்களின் ஜெராக்ஸ் காப்பியாக செயல்படுவார்கள். 

பிள்ளைகள் முன்பு அநாகரிமான பேச்சு, கத்தி கூப்பாடு போடுதல், பொறாமையான எண்ணங்களில் பிறரைப் பற்றி பேசுதல், சண்டை போடுதல், கண்ணில் படுதலை எடுத்து வீசுதல் போன்ற செயல்களை எல்லாம் செய்தல் கூடாது.  

தாயும் தந்தையும் ஒரு சேர பிள்ளைகளை வளர்க்கும் பொழுது தாய் திட்டினால் அதில் உள்ள விவரங்களை தந்தை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். தந்தை கொடுக்கும் தண்டனையின் உண்மையான நோக்கத்தினை தாய் பிள்ளைகளுக்கு உணர்த்தினால்  உங்கள் வீட்டு குழந்தைகள் சிறந்த பட்டூஸாக இருப்பார்கள். 

 குழந்தைகளை கண்கானியுங்கள்:

குழந்தைகளின் விருப்பம் தெரிந்து கொள்ளுங்கள், அவர்களை நன்றாக கண்கானியுங்கள், அவர்களுக்கு தெரியாமலே கண்கானிக்க வேண்டும். உங்கள் வீட்டு சுட்டிஸ்களுக்கு பிடித்த பிடிக்காதவற்றை தெரிந்து  செயல்படுங்கள். நல்ல சிந்தனை, செயல் ஆகியவற்றை அவர்கள் புறக்கணிக்கும் பொழுது அவர்களுக்கு புரியும் வழிகளில் எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் பின்பற்றி நடக்கச் செய்யுங்கள். 

 சுட்டிஸ எப்பவும் பிஸியா வச்சுறுங்க:

உங்க வீட்டு பாப்பாகளை எப்பொழுதும் சுட்டியா விளையாட விடுங்க, அவர்கள் செய்யும் குறும்புகளை ரசித்து மகிழுங்கள். உங்கள் வீட்டு சுட்டிசுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுங்க படிக்க நிறைய வாய்ப்புகள் கொடுங்க, புத்தக வாசிப்பு,   விளையாட்டுகள், பாட்டு வகுப்பு, கராத்தே வகுப்பு, யோகா வகுப்புகள், இசைப் பயிற்சி போன்றவற்றில் எதாவது ஒன்றினை ஈடுப்பத்துங்கள். மொழி அறிவினை  அதிகப்படுத்துங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஜெர்மன், ஸ்பானிஸ் போன்ற மொழிகளை படிக்க வையுங்கள் அவற்றில் தேர்ச்சி பெற வையுங்கள்.  

எப்பவும் எதிலாவது பிஸியா வையுங்கள். டிவி,  மொபைல் போன் பயன்பாட்டை நிறுத்துங்கள்  பயன்படுத்துதல் தவறு என எடுத்துச் சொல்லுங்கள், அருகில் இருக்கும்  சக வயது குழந்தைகள் பயன்படுத்துகிறார் என்றாலும் பரவாயில்லை. அவற்றின் தீமைகளை எடுத்துச் சொல்லி பயன்பாட்டை தவிருங்கள். பிள்ளைகள் முன்பு போனில் மூழ்காதீர்கள்.

குழந்தைகளிடம் பேச்சுக் கொடுத்து  அவர்களுக்கு நம்பகரமான மனிதர்கள் என்றால் அது பெற்றோர்கள்தான் என்பதை அவர்கள் சொல்லும்படியாக, நம்புபடியாக நீங்கள் நடக்க வேண்டும் பெற்றோர்களே. குழந்தைகள் வளர்பில் உங்களின் சாதுரியம் முக்கியப் பங்கு வகிக்கின்றது. நீங்கள் சார்ந்த சமுதாயம், ஊடகம், கல்வி, உறவினர்கள், சுற்றத்தார்கள்  கருத்துக்களை விட குழந்தைகளின் எதிர்காலம் தான் அவசியமானது ஆகும்.

முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம்  உங்கள் வீட்டு பட்டூஸ் படுபுத்திசாலிகளாக வளர்வார்கள். 

WRITTEN BY RMP KOKILA AND SHOBANA 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *