சுற்றுலா

லாங் ட்ரிப் போறிங்ளா அப்ப இத படிசுட்டு போங்க!

இன்றைய காலகட்டத்தில் நாம் போகும் பயணம் எந்த வித படபடப்பும், டென்ஷன் இல்லாமலும் பார்த்துகனும். இரவு நேர பயணத்தை தவிர்ப்பது நலம் தரும்.  நீங்கள் போவது தனிப்பட்டதாக இருந்தால் பஸ், ட்ரெயின், கார் எதுல போனாலும் நீங்க பாதுகாப்பாக இருப்பதை உறுதி படுத்திக்கோங்க. டிக்கெட்ஸ், வாகன புரூப் அனைத்தும் எடுத்து வைத்து கொள்ளுங்க. யாரையும் நம்பி உங்க லக்கேஜ் ஒப்படைக்காதீர்கள். உங்கள் மேற்பார்வையில் இருக்கட்டும். 

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை

உங்கள் வாகனம் நல்ல நிலையில் உள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கணும். நீண்ட தூரம் செல்வதால் இடையூறுகள் இருக்க  கூடாது. நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எந்த வழியாக செல்லலாம், என்பதை முன்னரே ஒரு தடவை திட்டமிட்டோ, அல்லது கூகுளை பார்த்து வழித்தடத்தை அறிந்து கொள்வதால், போக வேண்டிய இடத்திற்கு சரியாக குறித்த நேரத்தில் நீங்கள்  போய்  சேர முடியும்.

போதுமான அளவு பணம் மற்றும் பெட்ரோல் உள்ளதா என்பதையும்,  உறுதிப் படுத்திக்கோங்க. நீங்கள் கிளம்பும் போதே , எங்கே? யாரை? பார்க்க போகிறீர்களா, அவர்களுக்கு நீங்கள் கிளம்பிய நேரம், எத்தனை மணிக்கு வருவீங்க, எந்த வழியா வரிங்கனு எல்லாத்தையும் தெரியப்படுத்துங்க. இது உங்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை.

நீங்கள் போய்  கொண்டிருக்கும் போது இடையூறாக வழிப்போக்கர்கள் உங்கள் வண்டியை நிறுத்த கையசைத்தால், வாகனத்தில் ஏற்றி செல்லாதீர்கள். உங்கள் வண்டியை வாகன பழுதுபார்ப்பு, மக்கள் நடமாடும் பொது இடங்கள், பெட்ரோல் பங்க் தவிர எங்கயும் பார்க் செய்யாதீர்கள். தேவைபட்டால் காவல்துறை உதவியை நாடலாம். உங்கள் வாகனத்தை யாரவது பின் தொடர்வதாக  உணர்ந்தால், வாகனத்தில் உள்ள ஒலி அல்லது லைட் போட்டு உங்களின் ஆபத்தை தெரியபடுத்துங்க.

விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைங்க. கூட்ட நெரிசலில் உங்கள் வாகனத்தை நிறுத்தி செல்ல  நேர்ந்தால்,  ஜன்னலை பெருமளவு  திறந்துவைக்காதிங்க. சிலர் திருட வழிவகுத்து விடும். வண்டியில் போகும் போதும் காற்றுக் காக ஜன்னலை சிறிது மட்டும் திறந்து வைங்க. போக்கு- வரத்துக்கு கட்டுப்பாட்டு நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்த நேரிடும் போது, யாரேனும் பேசமுற்பட்டால், கதவுகளை பூட்டிய வண்ணம் ஜன்னலின் சிறு இடைவெளியில் பேசவும். 

பிரதான சாலை

இருட்டிய பின்னர் நல்ல வெளிச்சம் உள்ள பகுதியில் மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக பார்த்து நிறுத்துங்க.  வாகனத்தை விட்டு  இறங்கும் முன் சுற்றி பார்வையை செலுத்துங்க. இரவில் வந்து வண்டியை எடுப்பதாக இருந்தால்  சூழ்நிலை எப்படி இருக்கும் என்பதை அறிந்து பார்த்து கொள்ளுங்கள்.  முடிந்தவரை நீங்கள் போகும் சாலை பிரதான சாலையாக தேர்ந்தெடுத்து அந்த வழியே செல்லுங்கள்.

அவ்வப்போது போனில் பேசும் சூழ்நிலை வந்தாலும், பேசிக்கொண்டே டிரைவ் செய்யாதீர்கள். வண்டியை பார்க் செய்யும்போது போன் பேசுவதை முடித்து கொள்ளுங்கள். பாதைகளை பற்றி சந்தேகங்களும் இந்த மாதிரியான இடங்களில் பார்த்து வைத்து கொள்ளுங்கள். மேலும் இந்த மாதிரியான பாதுகாப்பு பற்றி தொடர்ந்து படிங்க அடுத்த பதிவிலும் பகிர்கிறேன்.

மேலும் படிக்க

ட்ரிப் போறிங்களா.. அப்ப இதெல்லாம் படுச்சுட்டு போங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *