மகளிர் உலக கோப்பை 2022 ஆண்டு ஒத்திவைப்பு ஐசிசி வாரியம் முடிவு
இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 50 ஓவர் மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் விளையாட முன்னதாகவே தகுதி பெற்று இருந்தன.
மீதம் உள்ள அணிகள் தகுதி போட்டிகளில் ரிசல்ட்டை பொருத்தி உலக கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பை பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கோவிட் 19 அச்சுறுத்தலின் காரணமாக மகளிர் உலகக் கோப்பை தொடரை 2022 ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி 50 ஓவர் உலக கோப்பை தொடரின் பன்னிரண்டாவது எடிசனை ஒத்திவைக்க ஐசிஐசிஐ வாரிய கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் 50 ஓவர் மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வரும் பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

தற்போது 2022ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை தொடரை ஒத்திவைத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கோவிட் 19 அச்சுறுத்தல் தான் இதற்கு காரணம் என்று ஐசிசி அறிக்கையில் வெளியிட்டுள்ளன.
உலக கோப்பை தொடர் 2022 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிதாலிராஜ் மற்றும் சீனியர் வீரர்கள் இந்த தொடரில் விளையாடுவதும் சிக்கலாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் உலக கோப்பை 2022 ஆண்டு ஒத்திவைப்பு ஐசிசி வாரியம் முடிவு.