பசியே இல்லையா கண்டுக்காம விடாதீங்க
பெரும்பாலும் வளர் இளம் பருவத்தினர் உள்ள பெண்களை அதிகம் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். தேவையான அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உணவை எடுத்துக்கொள்வதை ஒருவித வியாதி என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கண்ணாடியில் தன்னை பார்க்கும் போதே மிகவும் ஒல்லியாக இருந்தாலும் தான் மிகவும் குண்டாக இருப்பதாக நினைத்து தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் ஒருவித மனநோய் என்று கூற வேண்டும்.
மன அழுத்தம், அதீத உடல் பருமன், இதய பாதிப்பு, டைப் டூ நீரிழிவு நோய், பக்கவாதம் போன்ற பிரச்சனைகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள். அடிக்கடி ஒளித்து வைத்து யாருக்கும் தெரியாமல் சாப்பிடுவது. பசிக்காத போது சாப்பிட்டுக்கொண்டே இருப்பது.
உடல் எடை கூடுவதை குறித்து ஒருவித பயம் இருந்து கொண்டே இருக்கும். பொது இடங்களில் செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் கூச்சப்படுவார்கள். உடலில் சேரும் அதிகப்படியான சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை சரியாக செரிக்காது.
உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் தான் உணவின் அளவு மாறுபடுகின்றன. உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு உறுப்புகள் செயலிழத்தல் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் இதனால் ஏற்படுகின்றன.
உணவு சம்பந்தப்பட்ட கோளாறுகள் மரபு வழியாக கூட சிலருக்கு ஏற்படக் கூடும். சிலருக்கு ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும். சிலர் நீண்ட நாட்களாக சாப்பிடாமல் இருந்தாலும் அல்லது டயட் முறையைப் பின்பற்றியதால் கூட இதுபோன்ற டிஸ்ஆர்டர் ஆல் பாதிக்கப்படுவார்கள்.
மூளை வளர்ச்சி குறைபாடு மற்றும் அதீத மன அழுத்தம் கூட காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உடல் எடை பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தீவிர உடல் பிரச்சனைகள் ஏற்படுவதோடு பல நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளும் முடிவும் வந்து போகும்.
சமூகத்தில் மற்றவர்களுடன் சகஜமாக பேசி பழகுவது சிரமம் ஏற்படும். இவர்களுக்கு பெரும்பாலும் யார் கண்ணிலும் படாத தனிமை விரும்பிகள் ஆகவே இருக்கக்கூடியவர்கள். இது போன்ற பிரச்சனைகள் உடலில் தென்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.