மருத்துவம்

பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் சித்த மருத்துவமாகும்!

பன்றி காய்ச்சல்  மற்றும் டெங்கு காய்ச்சல் போன்ற  நோய்களால் மக்கள் மிகுந்த அளவில் பாதிக்கப்படுகின்றனர். பலருக்கு பன்றிக்காய்ச்சல் குறித்து முறையாக தகவல்கள்  கிடைப்பத்தில்லை.
பன்றிக்காய்ச்சல் எச்1, என்1 வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. பன்றிக்காய்ச்சல்  நோயானது  தொற்று நோய் போன்று செயல்படுகின்றது. பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர் காயச்சல் மற்றும் சளி இருமலால் பாதிக்கப்படுவார்கள். முதலில் காய்ச்சல் மற்றும் சளி இருமல் இருக்கும். 

பன்றிக்காய்ச்சல் தாக்கப்பட்டவருக்கு நோய் முற்றினால் ரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் மற்றும் ரத்ததட்டுகளை அழிக்கும் இதனால் நோயாளி ரத்த தட்டுக்கள் அழிக்கும் இதனால் நோயாளி இறக்கும் நிலை ஏற்படும். குளிர் காலத்தில் இந்நோய் பலரைக் க் காக்கும்
ஸ்வைன்ஃபுளுவின் அறிகுறிகள்:  ஸ்வைன் ஃபுளு என அழைக்கப்படும் பன்றிக்காய்ச்சல் தாக்கப்பட்டவரக்கு குளிர், காய்ச்சல் மற்றும் இருமல், மூக்கு ஒழுகுதல், உடல்வலி வாந்தி, குமட்டல், தொண்டைக்கட்டு பேதி  போன்றவற்றால் பாதிக்கப்பட்டு களைப்பு மிகுந்து காணப்படுவார்கள். 
ஸ்வைன்ஃபுளு ஏற்பட்டால் வீட்டில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் மற்றும் அதிக அளவு தண்ணீர், பழரசம், சூப் போன்றவற்றை குடிக்க  வேண்டும். 
அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். மூக்கு வாய், கண்களை தொடக்கூடாது .
அதிக கூட்டம் உள்ள இடங்களை தவிர்த்து செயல்பட வேண்டும். 
பன்றிக்காய்ச்சல் எச்சில் மூலம், தும்மல், இருமல் மூலம் மற்றவர்களை தாக்கும். 
சித்த மருத்துவ மருந்துகள் :  பரவிவரும் பன்றிக்காய்ச்சலை குணப்படுத்து சித்த மருத்துவத்தினை கொண்டு குணப்படுத்தலாம் என்றும் கபசுரக் குடிநீர் மிகவும் பலந்தரும் மருத்ததாகும் என தெரிவித்தனர்.   டெங்கு காய்ச்சலை குணப்படுத்த நீலவேம்பு கசாயம் உதவுவது போல் பன்றிக்காய்ச்சல் பாதிப்பிலிருந்து குணபடுத்த கபசுரக் குடிநீர் உதவும். 
கபசுரக் குடிநீர்:  3000 ஆண்டுகளுக்கு முன்பு யுகி முனிவர் கபசுரக் குடிநீர்  தயாரிக்கும் முறையாகும்.  சிறுதேக்கு, சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடாதொடா வேர், கற்பூரவள்ளி, சீந்தில் கோரைக்கிழங்கு  கோஷ்டம் அக்ராஹாரம், ஆகிய மூலீகைகளை சம அளவில் எடுத்து சுபகரக் குடிநீர்  தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்தானது அனைத்து சித்த மருத்துவ கடைகளிலும் கிடைக்கின்றது. 
மேலும் தொண்டை  கரகரப்பு தொடங்கும் போது சித்த மருத்துவரிடம்  தாளிசாதி வடகம் மாத்திரை சாப்பிட்டாலும் நிவாரணம் கிடைக்கும். மேலும் அதன்பின் பன்றி காய்ச்சல் உறுதி என்று கூறப்பட்டப்பின்பு சுபசுரக் குடிநீரை கஷ்யாமாக காய்ச்சிக் குடித்தால்  உலல் நலம் குணமடையும். 
நான்கு தேக்கரண்டி தூளை 200 மில்லி லிட்டர் நீரில் கலந்து கொத்திக்க வைத்து வடிக்கட்டுவதன் மூலம் 60 மில்லி லிட்டர் கஷாயத்தை பெறலாம். இதனை  தொடர்ந்து 3 நாட்கள் குடிக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *