தூக்கத்தினால் ஏற்படும் மாற்றங்கள் அறிவியல் காரணங்கள்
நீங்கள் தூங்கி எழும்போது ரெம் சுழற்சி நிறுத்தப்படுகிறது. அப்போது அசையாத நிலையில் இருந்த சதைகள் மீன்டும் அசைய ஆரம்பிக்கின்றன. ரெம் சுழற்சி நிறுத்துவதில் கோளாறு ஏற்பட்டால் நீங்கள் கண் விழிபீர்கள். ரெம் தூக்கம் இன்னும் ஆப் செய்யப்படாமல் இருப்பதால் சதைகள் அசையாத நிலையிலேயே இருக்கும்.
உங்களுக்கு யாரோ அழுத்துவது, மூச்சு விட சிரமம், யாரோ அழைப்பது போன்ற உணர்வுகள் ஏற்படும். ஏன் இந்த பய உணர்வு என்றால் மூளையில் உள்ள அமை டல்லா என்ற பய உணர்வைத் தூண்டும் பகுதி ரெம் தூக்கத்தின் போது ஆக்டிவ் நிலையில் இருக்கும்.
உங்களுக்கு ரெம் நிலை ஒழுங்காக தூங்கி எழும்போது ஆப் செய்யப்படாததால் இந்த பய உணர்வு ஏற்படுகிறது. ஸ்லீப் பேரலைசிஸ் ஏற்பட நிறைய காரணிகள் உண்டு. மன அழுத்தம், அதிக ஆல்கஹால், உளவியல்ரீதியான உபாதைகள், தூக்கமின்மை, மரபணு கோளாறுகள் என்று பட்டியலிடுகின்றன.
உங்களுக்கு இவ்வாறு எப்போதாவது ஏற்பட்டால் பயப்பட வேண்டாம். நல்ல எட்டு மணி நேர இரவுத் தூக்கம் முறையை மேற்கொண்டால் மன அமைதி ஏற்படும். ரெம் சுழற்சியை கையாளும் ஆன் ஆப் ஸ்விச்சில் பாதிப்பு ஏற்பட்டால் நாம் எழுகையில் தசைகள் செயலற்ற நிலையில் இருப்பதால் இவ்வாறு யாராவது அழுத்துவது போன்ற உணர்வு ஏற்படுத்தும்.
கனவுகள் ஏற்படும் போது நாம் எழுந்து நடக்கவோ, பேசவோ கூடாது. என்பதற்காக மூளையிலிருந்து தசைகளுக்கு சிக்னல் அனுப்பப்படும். அவை தசைகள் அசையாமல் இன் ஆக்டிவ் நிலையில் வைக்க உதவும். தினமும் 8 மணிநேர தூக்கத்தை ரெம் சுழற்சி மாறிக்கொண்டே இருக்கும்.
எட்டு மணி நேர தூக்கத்தில் 25% ஆக்கிரமித்துக் கொள்ளும். பலருக்கு தூக்கத்தில் யாரோ அழுத்துவது போன்றும் கண்விழித்து எழுவதற்கு நினைக்கையில் கை கால்களை அசைக்க முடியாத உணர்வு தோன்றும். இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்கள் தான் இவை. எனவே பயப்பட வேண்டியது இல்லை. நல்ல தூக்கம் இருந்தால் போதுமானது.