ஆன்மிகம்ஆலோசனை

சியாமளா நவராத்திரி முதல் நாள் தொடக்கம்

சியாமளா நவராத்திரி இன்று முதல் தொடங்கப்படுகிறது. கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சரஸ்வதி தேவி வணங்கி இந்த விழாவானது கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் ஐந்து விதமான நவராத்திரிகள் இருக்கின்றன. நான்கு விதமான நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. அவற்றின் தை மாதம் கொண்டாடப்படும் சியாமளா நவராத்திரி குழந்தைகளுக்காக கொண்டாடப்படுகின்றது.

குழந்தைகள், கன்னிப் பெண்கள்

கன்னிப்பெண்கள், குடும்ப ஒற்றுமை வேண்டுபவர்கள் ஆகியோர் இந்த விழாவை கொண்டாடுவார்கள். எளிமையாக தேவிக்கு பூஜை செய்து வழிபாடுகள் நடத்தி கொண்டாடப்படுகின்றது. சியாமளா நவராத்திரி கொழு வைக்காமல் தேவியின் படம் அலங்கரித்து வைத்து பாயசம் அல்லது சுண்டல் வேகவைத்து நைவேத்தியமாக படைப்பார்கள் மேலும் கல்கண்டு, வர திராட்சை, முந்தரி ஆகியவையும் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

எளிமையான பூஜை

சாமள நவராத்திரியில் ஞானம் புத்தி கூர்மை போகள் செல்வவளம் குடும்ப ஒற்றுமை ஆகியவை வலியுறுத்தி பராசக்தியின் மற்றொரு ரூபமான சரஸ்வதி தேவி வணங்கி கொண்டாடுவார்கள், மாதங்கி தேவியாக சியாமலா நவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தேவி கரும்பச்சை நிறத்தில் மங்களகரமாக இருப்பார் சியாமளா பூஜையில் பல ஸ்லோகங்கள் சொல்லப்படுகின்றன.

லலிதா சக்ஸரநாமம்

லலிதா சகஸ்ரநாமம் செல்லப்பட்டு அல்லது கேட்டும் இந்த பூஜையை சிறப்பாக செய்யலாம். அத்துடன் அபிராமி அந்தாதி பாடியும் ஒன்பது நாளும் இந்த விழாவை சிறப்புடன் அனைவரும் வீட்டில் கொண்டாடி வரலாம். இதன் மூலம் இறை அருள் கிடைக்கப்பெற்று வாழ்வில் வளம் பெறலாம். பண்டித உபாசகர்கள் சியாமளா நவராத்திரி விருப்பமாகக் கொண்டாடுவார்கள் வடமாநிலங்களில் கொண்டாடப்படுகின்றது.

மேலும் படிக்க : கவிஞர் கண்ணதாசன் கவியில் கண்ணன்

மக்களுக்கு சியாமளா நவராத்திரி

இதுகுறித்து மக்களுக்கு தெளிவான விளக்கங்கள் பொதுவாக தெரிவதில்லை. ஆனால் இந்த முறை நாம் சியாமளா நவராத்திரியை முறையாக கொண்டாடி தேவியின் அருள் பெறுவோம். 21ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் தேவிக்கு நெய்வேத்தியம் வைத்து தீபாராதனை காட்டி மனமுருகி வேண்ட வேண்டியது கிடைக்கும். அனைவரும் சியாமளா நவராத்திரி பின்பற்றி வாழ்விற்கு தேவையான வளங்கள் அனைத்தும் பெறலாம்.

பீஜ மந்திர பாராயணம்

சியாமளா நவராத்திரி கொண்டாட்டம் முறை சியாமளா நவராத்திரி தேவியின் படங்கள் வைத்து, விளக்கேற்றி,பூச்சூடி தீபாராதனை காட்டி விழாவை சிறப்பாக கொண்டாடலாம். இந்த ஒன்பது நாட்களும் ஐம்ஹீரிம் கீலிம் சாமுண்டாய விச்சே சரஸ்வதி லட்சுமி, பார்வதி ஆகிய மூவரையும் சாமுண்டாய ரூபத்தில் காண்பது மேலும் ஓம் ஐம் ஹ்ரீம், ஸ்ரீம் என்ற பீஜ மந்திரத்தை ஒன்பது நாளும் 108 முதம் 10000 முறை தினசரி ஜெபித்து வர நமக்குத் தேவையான புகழ், பணம் மற்றும் செல்வாக்கு, காரிய வெற்றி ஆகியவை அனைத்தும் கிடைக்கப் பெறலாம்.

மேலும் படிக்க : நவராத்திரி இரண்டாம் நாளில் பஞ்சாங்கமும் உங்களின் ராசி பலனும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *