SWIFT சேவை தடை:- ரஷ்யாவுக்கு வரும் பாதிப்பு என்ன?
கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் SWIFT சேவையின் பயன்பாட்டில் இருந்து ரஷ்யாவுக்கு தடை விதிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.விரைவில் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ரஷ்யாவுக்கு வரும் பாதிப்பு என்ன?
ஒரு நாட்டின் எல்லையை தாண்டி நடைபெறும் பண பரிவர்த்தனையை சுமூகமாக நடைமுறை படுத்த 1973 ஆம் ஆண்டு முதல், SWIFT என்ற அமைப்பு பெல்ஜீயத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ரஷ்யா உட்பட சுமார் 200 நாடுகளில் 11,000 நிதி நிறுவனங்களால் இந்த SWIFT சேவை பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத் தொடர்புகளுக்கான சமூகம் என்ற இந்த SWIFT அமைப்பை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வங்கிகள் ஒருங்கிணைந்து உருவாக்கியது. ரஷ்யாவை அதிலிருந்து தடை செய்வதால், உதாரணமாக: எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிக்கு ரஷ்யா பணம் பெறுவதில் இழப்பு ஏற்படும்.
அமெரிக்காவின் நெருக்குதலின் கீழ் 2012ல் ஈரான் SWIFT சேவையில் இருந்து தடை செய்யப்பட்டபோது, ஈரான் தனது எண்ணெய் ஏற்றுமதி வருவாயில் கிட்டத்தட்ட பாதியையும், வெளிநாட்டு வர்த்தகத்தில் 30 சதவிகிதத்தையும் இழந்தது. SWIFT சேவைகளை பயன்படுத்த ரஷ்யாவை தடுப்பது, அந்நாட்டின் பொருளாதாரத்தின் மீதான அணுகுண்டு தாக்குதலுக்குச் சமம் என்று சிலர் கூறப்படுகிறது.
ரஷ்யா அந்த சேவைக்கு மாற்றாக கடந்த 8 ஆண்டுகளாக SPFS என்கிற சேவையை உருவாக்கி செயல்படுத்தி வந்துள்ளது.
SPFS சேவை மற்றும் சீனாவின் எல்லை கடந்த வங்கிகளுக்கு இடையிலான கட்டண முறையை ரஷ்யா பயன்படுத்தலாம் என்றாலும்.SWIFT சேவையில் இருந்து தடுப்பதால், உடனடி பாதிப்புகளை சமாளிக்க ரஷ்யாவுக்கு பெரும் சவாலாகவே இருக்கும்