Cassava sweet recipe: கப்பக்கிழங்கில் புதுவித ஸ்வீட் ரெசிபி எப்படி செய்யலாம்???
கப்பக்கிழங்கு என்பது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரக்கூடிய கிழங்கு வகைகளில் ஒன்றாகும். கேரள மக்கள் கப்பக்கிழங்கை தினம் தோறும் தங்கள் உணவுகளில் சேர்த்துக் கொள்கின்றனர். .கப்பக்கிழங்கும் கட்டச்சாயாவும் கேரளாவின் ஸ்பெஷல் ஆக உள்ளது. இவ்வாறு அவர்கள் தினமும் தங்கள் உணவுகளில் கப்பக்கிழங்கு சேர்த்துக் கொள்வது அவர்களுக்கு மிகுந்த பலத்தை தருகிறது. பொதுவாக கப்பக்கிழங்கு அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.ஆனால் ஒரு சில பேர் மற்றும் குழந்தைகள் கிழங்கு சாப்பிடுவது என்றாலே முகம் சுழிப்பர். அவர்களுக்கான ஒரு சூப்பரான ரெசிபி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். ஸ்வீட் என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது அதுவும் குழந்தைகள் ஸ்வீட் என்றாலே ஓடி வருவார்கள். அப்படிப்பட்ட ஸ்வீட் நிறைந்த ரெசிபியாக கப்பக்கிழங்கை எவ்வாறு செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கப்பக்கிழங்கு – 1
சுக்குப்பொடி – 1 சிட்டிகை
பொடித்த வெல்லம் – 1 கப்
நெய் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
ஸ்வீட் கப்பக்கிழங்கு செய்முறை
முதலில் சுத்தமான தண்ணீரில் கப்பக்கிழங்கை கழுவி எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு கப்பகிழங்கை வட்டமான வடிவில் லேசாக அதாவது சிப்ஸ் போன்ற வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும். பின்பு நாம் வெட்டி வைத்த கப்பக்கிழங்கு துண்டுகளை நிழலில் சிறிது நேரம் உலர வைக்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நாம் உலர வைத்த கப்பக்கிழங்கு துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு வெள்ளத்தை கரைத்து வடிகட்டிய பின் ஒரு பாத்திரத்தில் கரைத்து வைத்த வெல்லம் சுக்குப்பொடி மற்றும் நெய் சேர்த்து பாகு பதத்திற்கு காய்ச்சிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு நாம் ஏற்கனவே புரிந்து வைத்த கப்பக்கிழங்கு துண்டுகளை வெல்லப்பாகில் சேர்த்து சிறிது நேரம் ஊறவைத்து எடுக்க ஸ்வீட்டான சுவையான ஸ்வீட் கப்பக்கிழங்கு ரெடி…
ஊற வைத்த கப்பக்கிழங்கு துண்டுகளை நீங்கள் ஒரு வாரத்திற்கு கூட வைத்து சாப்பிடலாம். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முகம் சுழிக்காமல் விரும்பி சாப்பிடுவர்.