அறிவோம் ஐயப்பன் குறித்த சில ஆன்மீக குறிப்புகள்…
எல்லாம் வல்ல இறைவன் ஐயப்பனை வணங்காதவர்கள் இவ்வுலகில் இருக்க முடியாது அத்துணை சிறப்புகளையும், அத்தனை சக்திகளையும் பெற்று தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு என்றும் நீங்கா அருள்புரிந்து அவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார்… அவர் குறித்த இனிய சில தகவல்களை இந்த பதிவில் காண்போம்….
சுவாமியே சரணம் ஐயப்பா
ஒவ்வொரு கார்த்திகை மாதமும் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற மந்திர ஒலி கேட்காத இடமே இருக்க முடியாது எங்கு சென்றாலும் நாம் கேட்கும் ஒரு மந்திரமாக இருக்கும். மாலையணிந்து ஐயப்ப பக்தர்கள் காலையிலும் மாலையிலும் நீராடி இந்த மந்திரத்தை சப்தமாக உச்சரிப்பர்.ஐயப்ப பக்தர்களின் உயிர் மூச்சான இதிலுள்ள சரணம் என்பதிலுள்ள நான்கு எழுத்துகளுக்கும் மந்திரத் தன்மை உண்டு. அவை என்ன என்று பின்வருமாறு காண்போம்..
ச என்பது காமம் உள்ளிட்ட தீய எண்ணத்தை அழிக்கவும்
ர என்பது உலக வாழ்வு நிலையற்றது என்ற ஞானத்தை தரவும்
ண என்பது அமைதியையும்
ம் என்பது மகிழ்ச்சியையும் தர வல்லது.
நாம் சாதாரணமாக ஐயப்பனின் நாமம் என்று உச்சரிக்கும் இவ்வார்த்தையில எவ்வளவு அர்த்தமுள்ள பொருள் நிறைந்துள்ளது.. ஐயப்பனின் மகிமையை மகிமைதான்… இந்த ஒரு நாமத்தில் மனித வாழ்விற்கு தேவையான அனைத்தும் அடங்கும்.
“தத்வமஸி” என்பதன் பொருள்
சபரிமலை சென்று உள்ள அனைத்து பக்தர்களும் இந்த சொல்லை பார்த்திருப்பீர்.சபரிமலை ஐயப்பன் கோவில் நுழைவு வாசலில் தத்வமசி என எழுதப்பட்டு இருக்கும்.இதன் பொருள் நீயே அதுவாக இருக்கிறாய் என்பது ஆகும். அது என்பது ஐயப்பனை குறிக்கும்.
” நீ உருவத்தால் மனிதனாய் இருக்கிறாய். உன் உடலைக் கொண்டு பல பாவங்கள் செய்கிறார். என்னை நினைத்து விரதம் இருக்கும்போது மட்டும் உன் உடலையும், மனதையும் கட்டுக்குள் வைத்திருக்கிறாய். உன்னை மற்றவர்கள் சுவாமி என அழைக்கிறார்கள். ஏன்.. ஐயப்பா என்று கூட சிலர் அழைப்பதுண்டு. அப்போது நீ நானாகவே ஆகிறாய். தெய்வ நிலைக்கு உயர்த்தபடுகிறாய்.இங்கிருந்து திரும்பிய பிறகும் மனக்கட்டுப்பாட்டை இழக்காதே. என்னைப் போலவே மாறி விடுவாய் ” என்று ஐயப்பன் பக்தர்களுக்கு சொல்வது போல உள்ளது இந்த வாக்கியம்…
மேலும் படிக்க : குருவாரத்தில் குருவை சரணடையுங்கள்
ஐயப்பனுக்கு உகந்த நைவேத்தியம்
ஐயப்பனுக்கு உகந்த நைவேத்தியம் என்ன என்பதை பின்வருமாறு காண்போம்.
அதிகாலை நைவேத்தியம்
ஐயப்பனுக்கு அதிகாலை பூஜையின்போது விபூதி, பால், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், பன்னீர் ,தூயநீர் என்னும் எட்டு திரவியங்களால் அபிஷேகம் செய்வர். அதன் பின் கதலிப்பழம், தேன், சர்க்கரையால் செய்த திருமதுரம் என்னும் உணவு நைவேத்தியம் செய்யப்படும். தொடர்ந்து நெய் அபிஷேகம் நடத்தப்படும்.
உச்சிக்கால நைவேத்தியம்
உச்சிகால பூஜையின்போது இடித்துப் பிழிந்த பாயாசம் படைக்கப்படும் இதில் தேங்காய்ப்பால், கதலிப்பழம், சர்க்கரை ,சம்பா பச்சரிசி,சுக்கு, நெய் ஆகியவை சேர்க்கப்பட்டு இருக்கும். இதற்கு “மகா நைவேத்தியம்” என்று பெயர்.
கலச பூஜை
கலச பூஜையின் போது அரவணை, பச்சரிசி சாதம் படைக்கப்படும்.
இரவு பூஜை
இரவு பூஜையில் அப்பம்,பானகம், பச்சரிசி சாதம் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
எருமைக்கொல்லியில் நடக்கும் ஆட்டம்
சபரிமலை செல்லும் பக்தர்கள் முதலில் எருமேலியில் உள்ள வலிய அம்பலம் தர்மசாஸ்தா கொச்சம்பலம் பேட்டை சாஸ்தா கோவில் களை தரிசிப்பர். இங்குதான் எருமைத்தலை அரக்கி மகிஷியை ஐயப்பன் கொன்றார். எருமை கொல்லி என்னும் சொல்லே பிற்காலத்தில் எருமேலி என திரிந்தது என்று கூறுவர்.
பக்தர்கள் வேடர்களை போல இலை, தழைகளை உடம்பெங்கும் செருகியபடி இங்கு ஆடிப் பாடுவர். இதற்கு பேட்டை துள்ளல் என்று பெயர். சுவாமி ஐயப்பனின் படைகள் காட்டில் நுழையும் முன் இங்கு ஆடி பாடி அதை நினைவுபடுத்தும் விதத்தில் இந்த சடங்கு நடத்தப்படுகிறது.
சுவாமி ஐயப்பன் குறித்த சில அரிய தகவல்களை இந்த பதிவில் நாம் பார்த்தோம் இவை அனைத்தும் கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.