பிரதமர் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவர்களுடன உரையாடல்
இன்று பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டம் அதன் செயல்பாடு பல்வேறு பகுதிகளில் இருக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். மகாத்மா காந்தியின் தூய்மை இந்தியா திட்டம் நிறைவேறும் வகையில் உரையாடல் இருக்கும். அதன் செயல்பாட்டில் மாணவர்களின் பங்குகுறித்து வருவிக்க நமது பிரதமர் மோடி அவர்கள் என்று கலந்துரையாடலை மாணவர்களுடன் செய்து வருகின்றார்.
2014 அக்டோபர் 2 தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு ஆறு வருடங்கள் ஆகின்றது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கழிப்பறை வசதி உருவாக்க திட்டமிடப்பட்டது. இலக்காக கழிப்பிட வசதியை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு நாட்டில் பல பகுதிகளில் கழிப்பிடங்கள் கட்டி தரப்பட்டன.
இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் சுமார் 55 கோடிக்கு மேல் மக்கள் தொகைகள் திறந்த வெளியை கழிப்பறையைப் பயன்படுத்திய வந்தனர். அவர்களுக்கு முறையான கழிப்பிட வசதி செய்து தரப்பட்டது. சர்வதேச அளவில் இதன் மூலம் இந்தியா தூய்மை பணியிடத்தில் முக்கியமான பங்கு பெறுகின்றது.
இந்த தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் சுகாதாரம் பாதுகாத்தல் குறித்து அறிவுறுத்துகின்றது. தூய்மை இந்தியா திட்டம் தற்போது இரண்டாம் கட்டத்தில் இருப்பதாக இருக்கின்றது. நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலந்துரையாடுகிறார்.
இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ராஷ்ட்ரிய் ஸ்வச்சதா கேந்திரா திட்டத்தை துவக்கி வைத்து தேசிய தூய்மை மையமான டெல்லியில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். ராஷ்ட்ரிய ஸ்வேதா கேந்திரா தூய்மை திட்டத்தை டெல்லியில் காந்தி சமாதியில் இந்திய பிரதமர் அவர்கள் தொடங்கி வைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு தூய்மையின் அவசியம் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். சாலையில் எச்சில் துப்புதல், சாலையில் குப்பைகளைப் போடுதல், தண்ணீர் ஊற்றி விடுதல், கழிவு நீரை திறந்து விடுதல், ஆகிய அனைத்தும் தவறான ஒரு முன்னுதாரணங்கள் ஆகும். இதனை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும், இதன் ஆபத்துகள் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
உயர்கல்வி வரை உள்ள மாணவர்களுக்கு தூய்மை இந்தியா குறித்த முழு விழிப்புணர்வும் பயிற்சி முறைகள் கற்றுக் கொடுக்கும் போது தூய்மையின் அவசியம் அவர்களுக்கு முழுமையாக புரிவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும். இதன் மூலம் மாணவர்கள் அவர்கள் சுற்றியுள்ள பகுதிகள் தூய்மையாக வைத்துக் கொள்வதுடன் தனது குடும்பத்தினரையும் தூய்மையின் அவசியத்தை புரிந்து செயல்பட வைக்கும்.
பொறுப்புடன் இருப்பார்கள். நாம் முழுமையாக இதனை உணர்ந்து பின்பற்றினால் வாழ்வு வளம் பெறும். மாணவர்கள் தூய்மையின் அவசியத்தை தெரிந்து கொண்டால் நாடு பல நல்ல மாற்றங்களுடன் தூய்மை பொங்க சிறப்பு வரும்.