என்ன உலகமடா சாமி இது இப்படி போகுது!
14 ஜூன் 2020 மும்பை பாந்திரா பகுதியில் தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் திரு சுஷாந்த் சிங் ராஜ்புட். அனைத்து நட்சத்திரங்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்த செய்தி பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.
34 வயது கொண்ட சுஷாந்த் தற்கொலை செய்வதற்கு என்ன காரணம்? என அனைவரும் ஆதங்கப்படுகின்றனர். இவருக்கு என்ன இவ்வளவு அவசரம் என்று அனைவரும் தன் வீட்டுப் பிள்ளையாக நினைத்து பரிதாபப்பட்டனர்.
இந்தியாவின் முன்னணி ஆங்கில எழுத்தாளரான சேத்தன் பகத்தின் ‘தி 3 மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப்’ என்ற நாவலை ‘காய் போ சே’ என்ற படமாக 2013ல் எடுத்தனர். இந்த படத்தில் அட்டகாசமாக அறிமுகமாகி பல இயக்குனரால் பாராட்டுக்கள் பெற்று பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது.
‘எம்.எஸ். தோனி அண்டோல்டு ஸ்டோரி’ 2016ல் வந்த இப்படம் இவரை எம்.எஸ். தோனி ஆகவே திரையுலகமும் ரசிகர்களும் கருதினர். கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனியின் ரசிகர்கள் சுஷாந்த் சிங்கிற்கும் ரசிகரானார்கள்.
இந்தப் படத்தின் அடுத்த கட்டமாக எம்.எஸ். தோனி இரண்டாவது பகுதி எடுத்தால் இவர் இல்லாமல் எவ்வாறு படத்தை பார்ப்பது என்று ரசிகர்கள் அனைவரும் மனம் நொந்து இருக்கிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை அன்று இவர் தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட பொழுது அந்த வீட்டின் வேலைக்காரர்களும் நண்பர்களும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
சமூக வலைத்தளமான டுவிட்டரில் ஹெட்டர் இமேஜ் என்ற பகுதியில் ஒரு பெயிண்டிங் வைத்துள்ளார் சுஷன்ட் சிங் ராஜ்புட். அந்தப் பெயிண்டிங் பின்னணியில் சரித்திரமே உள்ளது.
வின்சென்ட் வில்லியம் வான் கோ அல்லது வின்செண்ட் வான்கா என்பவர் ஒரு ஓவியர் இவரின் படைப்புகளில் சில உலகப் பிரசித்தம் பெற்றவை. விண்மீன்கள் நிறைந்த இரவு அவற்றில் குறிப்பிடத்தக்கவை. இவர் மனசோர்வு அதிகரித்து தனது 37வது வயதில் தன்னைத் தானே துப்பாக்கியால் நெஞ்சம் சுட்டு தற்கொலை செய்து இறந்து உள்ளார்.
விண்மீன்கள் நிறைந்த இரவு ஓவியத்தையே தனது டுவிட்டர் ஹெட்டர் இமேஜாக வைத்துள்ளார் சுஷாந்த் சிங் ராஜ்புட். இவரும் கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் அதிலிருந்து மீள முடியாமல் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
ஒருவரின் சிரிப்பிற்கு பின்னாடி இருக்கும் தூக்கத்தை பார்ப்பதற்கு நெற்றிக் கண்கள் இல்லை. ஒருவரின் மனத்தைப் படிப்பதற்கு ஒவ்வொருவரும் மாயாஜாலியும் இல்லை. இப்பொழுது இருக்கும் காலக்கட்டத்தில் மற்றவரை எதிர் பார்க்காமல் ஒருவன் அவருக்கு அவரே உற்ற துணையாக இருப்பது நன்று.
தனிமை காப்போம் தனித்துவமாக இருப்போம்.