சுஷாந்த்தின் இறப்பு தற்கொலையா? கொலையா?
சுஷாந்த் சிங் ராஜ்புட் பாலிவுட் கதாநாயகனாக இருந்தாலும் எல்லாருக்கும் அறிந்த படமான எம் எஸ் தோனியி அண்ட் கோல்ட் ஸ்டோரியின் கதாநாயகனாக அனைவருக்கும் அறிமுகமானார். சமீபத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டது எல்லோரையும் அதிர்ச்சியில் தள்ளியது.
எம்.எஸ். தோனியின் கதாப்பாத்திரத்தை நடித்த பின்னரும் அவர் இப்படி ஒரு செயலை செய்தது அனைத்து ரசிகர்களையும் வருத்தப்பட வைத்தது. 2019 ல் சிசோர் என்ற படம் நல்ல வரவேற்பை அளித்தது.
சம்பவம்
சுஷாந்த் சிங் ராஜ்புட் 14 ஜூன் 2020 அன்று தன் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து இறந்துள்ளார். அப்பொழுது வீட்டு வேலைக்காரர்களும் மற்றும் ஒரு நண்பரும் அவ்வீட்டில் இருந்துள்ளனர்.
‘இவர் தற்கொலை செய்து கொள்ளக் கூடிய நபர் அல்ல. இவரின் இறப்பிற்கு பின்னணியில் ஏதோ ஒரு காரணம் இருக்கக்கூடும். கொலையாகவும் இருக்கலாம்’ என சந்தேகிக்கும் உறவினர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு ‘சுஷன்ட் சிங் ராஜ்புட் கழுத்து இறுக்கப்பட்டு மூச்சுத்திணறலால் மட்டுமே இறந்துள்ளார்’ என விளக்கமளித்துள்ளார்.
நடந்தது என்ன?
திரையுலகம் என்பது நாம் பார்க்கும் படங்கள் மட்டுமல்ல அதற்கு பின்னால் நடக்கும் பல வேலைகள். எல்லா வேலைகளிலும் இருக்கும் சவால்கள் திரையுலகிலும் உண்டு.
படங்கள் பல நடித்திருந்தாலும் எந்தவித திரையுலக பின்னணியும் இல்லாமல் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்.
திரையுலகம் பல மொழிகளால் வேறுபட்டிருந்து மொழிகளுக்கு ஏற்றவாறு மக்களும் வேறுபட்டு அமைகின்றனர். சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் வளர்ச்சியை பாலிவுட் திரையுலகம் ஊக்குவிக்கவில்லை என்று கங்கனா ரனாவட் மற்றும் பல நடிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சதி
தனது குடும்பத்தினர் நேர்மையற்ற முறையில் ஆதாயம் பெறுவதற்காக, குறிப்பாகப் பணியமர்வு பெறுவதற்காகத் தனது அதிகாரத்தை அல்லது செல்வாக்கைப் பயன்படுத்துதல் என்று சொல்லப்படும் நபோடிசம் இவர் தற்கொலைக்கு காரணம்.
சுஷாந்த் சிங் ராஜ்புட் தன்னை பாலிவுட் திரை உலகம் குடும்பமாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கரன் ஜோகர் மற்றும் ஷாருக்கான் மேடை நிகழ்ச்சிகளில் சுஷன்ட் சிங் ராஜ்புட்டை அவமானப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
YRF தயாரிப்பின் கீழ் சுஷாந்த் சிங் ராஜ்புத் படம் செய்ய ஒப்புக் கொண்டபின் அவரை வேறு எந்த படத்திலும் நடிக்க அனுமதிக்கவில்லை அந்த நிறுவனம். எல்லா விதமான வாய்ப்புக்களும் கைவிட்டு நழுவத் தொடங்கின. பன்சாலி அவர்களின் ராம்லீலா படத்திற்கு சுஷாந்த் சிங் ராஜ்புட்டை கூப்பிட்ட பொழுது அவர் YRF-ஐ காரணம் காட்டி நடிக்க முடியவில்லை. கடைசியில் YRF சுஷாந்த் சிங் ராஜ்புத் இருக்கு படம் தராமல் ஏமாற்றியது.
YRF ஒரு தனி மனிதனின் சூழ்ச்சி அல்லாமல் ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனமாக இவரை தாக்கியுள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புட் கையொப்பமிட்டு நடிக்க இருந்த 7-8 படங்கள் ஒன்றொன்றாக கைவிடப்பட்டு வாய்ப்பற்று நின்றார்.
வழக்கு
நபோடிசம் சுஷாந்த் சிங் ராஜ்புட்டை மட்டும் தாக்காமல் பல நடிகர்கள் நடிகையர்கள் எனப் பலர் இதில் அவதி பட்டுள்ளனர்.
இமைக்கா நொடிகள் படத்தில் வந்த அனுராக் காஷ்யப்பின் சகோதரன் அபினவ் சிங்கிற்கும் இது நிகழ்ந்துள்ளதாக கூறியுள்ளார்.
தற்போது சல்மான் கான், கரன் ஜோகர் என 8 பேர் மேல் சுஷாந்த் தற்கொலைக்கு சுதீர் குமார் ஓஜா என்பவர் வழக்க தொடர்ந்துள்ளார்.
பாவம் புண்பட்ட சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் ஆன்மா சாந்தியடையட்டும்…