சூர்யாவின் பிறந்த நாள் ஸ்பெஷல் சிடிபி
சூர்யா நடிகராக தனக்கென்று ஒரு பாணி அமைத்து பல படங்கள் தந்து வருகிறார். தல தளபதி இருவருக்கும் நடுவே பூட்டிய ஏற்படுத்தும் ரசிகர்களுக்கு நடுவே தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் சூர்யா.
தளபதி ரசிகர்களாக இருந்தால் தலயை வெறுப்பார்கள். அதே போல் மற்றொருவரும் இருப்பார்கள். ஆனால் வெறுப்பவர்கள் இல்லாத நடிகர் சூர்யா. தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிதாகப் பேசப்படும் நடிகர் சூர்யா.
சமூக வலைத்தளம்
தீர்க்கதரிசியாக கொரோனவைரஸ் வெட்டுக்கிளி தமிழக அரசின் திடுக்கிடும் ஊர்களின் பெயர் மாற்றம் என்று பலவற்றை அன்றே கணித்து விட்டார். சூர்யா என்ற நெட்டிசன்கள் போட்டு இவரை டிரெண்டிங்கில் வைத்தனர்.

சூர்யாவிற்கு அடுக்கி வரும் படம் பட்டியல்கள் அடுத்துப் பெரிதாகப் பேசப்படும் விஷயம். சூரரைப் போற்று படப்பிடிப்பை முடித்து திரையரங்குகள் திறப்பதற்காக வெளியிட காத்திருக்கிறது. அருவா, வாடிவாசல், 24 படம் புகழ் விக்ரம் குமாரின் படம், மாஸ்டர் படம் புகழ் லோகேஷ் கனகராஜ், பசங்க படம் புகழ் பாண்டியராஜ் போன்றவை படப்பிடிப்பிற்காக காத்திருக்கிறது.
சமீபத்தில் சமையல் அறையில் புகுந்து பட்டையைக் கிளப்பிய புகைப்படங்களும் வைரல் ஆகியது. அதோடு சூர்யாவின் ப்ரொடக்ஷனான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் வந்த பொன்மகள் வந்தாள். அவரது மனைவியான ஜோதிகாவின் படம் OTTயில் ரிலீசானது.
பரபரப்பாக ரசிகர்களையும் மக்களையும் தன்னையும் வைத்துக் கொண்டிருக்கும். சூர்யாவின் பிறந்த நாள் இந்த மாதம். அதனையொட்டி பிரபலமான நடிகர்களின் பிறந்தநாளுக்கு தயாரிக்கப்படும். காமன் டிஸ்ப்ளே பிக்சர் (சிடிபி) நடிகர் சூர்யாவுக்கும் தயாராகியுள்ளது. வரலாற்று நிகழ்வாக இந்த சம்பவம் அமைந்திருக்கிறது.
பிரபல நட்சத்திரங்களின் சிடாபியை காட்டிலும் நடிகர் சூர்யா அவர்களின் சிடிபி பெரிய லெவலில் ட்வீட் செய்யப்பட்டு வருகிறது.
சிடிபியும் மீம்ஸும்
சூர்யா கையை உயர்த்தி நிற்க அவரை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் பாதையில் மக்கள் முன்னேறி உயருத்துக்கு செல்வது போல் உள்ளது அந்த பிக்சர். இதனை நெட்டிசன்கள் மீம் போட்டு தாக்கியுள்ளனர்.
‘மக்களால் இளையதளபதி உயரத்தை அடைகிறார் மக்களை உயரத்தை அடைய செய்வது நடிகர் சூரியா’ என் பஞ்சு அடித்திருக்கும் நெட்டிசன்கள்.

மேலும் சிடிபியில் சூர்யா நிற்கும் பின்னணியில் ஒரு புறம் கிராமமும் ஒரு புறம் நகரமும் இருப்பது போல் காட்சி அளிக்கிறது அதை பார்க்கும் போது நமக்கு காப்பான் படத்தின் நினைவு வருகிறது.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களும் சூர்யாவின் பிறந்த நாளான 23 ஜூலை 2020யிற்காக காத்திருக்கிறது.