காமிக் கதாநாயகனாக மாறும் நடிகர் சூர்யா
சூர்யாவோட எல்லா படமும் நிஜம் வாழ்க்கையில வந்துருச்சு இந்த படத்துல என்ன மர்மம் வைத்திருக்கிறார் என்று தெரியல. சூர்யாவினால் அந்த காமிக்ஸ்க்கு பவுசு ஜாஸ்தியாக போகுதுன்னு மட்டும் நல்லா தெரியுது. 90ஸ் கிட்ஸ் உஷாரா இருங்க அந்த காமிக்ல அவருக்கு கல்யாணம் ஆகுதான்னு பாருங்க.
கொரோனாவால் பலருக்கு மார்க்கெட் போன நிலையில் இருக்கிற இந்த நிலைமையில் சூர்யாவுக்கு மட்டும் மார்க்கெட் ஜாஸ்தியா இருக்குன்னு சொல்லலாம். நெட்டிசன்கள் என்று சொல்லப்படும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் இவரோட மார்க்கெட்டை அதிகபடுத்தி இருக்காங்க.
நடிகரும் தீர்க்கதரிசனமான சூர்யா
நடிகர் சூர்யாவோட அடுத்த பெரும் எதிர்பார்ப்பை தூண்டும் படமான சூரரைப்போற்று வெளியிட காத்திருக்கும் இந்த நிலையில் பல படங்கள் பட்டியலில் காத்திருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் இரு தயாரிப்புக்களை கொண்டு பிரம்மாண்டமாக இயக்கப்பட்ட இந்த திரைப்படம் கொரோனா ஊரடங்கு முடிவதற்காக காத்திருக்கிறது.
அதனைத்தொடர்ந்து இயக்குனர் ஹரியின் அருவா இயக்குனர் வெற்றிமாறனின் வாடிவாசல் படப்பிடிப்பிற்கு காத்திருக்கிறது. சமீபத்தில் 24 படத்தை இயக்கிய விக்ரம் குமார் ஒரு கதையை சொல்லி சூர்யாவிடம் கிரீன் சிக்னலும் வாங்கியுள்ளார். இயக்குனர் பாண்டியராஜ் சூரியா கூட்டணியில் ஒரு படமும் காத்திருக்கிறது அந்த படம் இயக்குனர் பாண்டியராஜ் ஸ்டைலில் எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்டர் படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய படம் கைதி. அந்தப் படப்பிடிப்பின் போது நடிகர் சூர்யாவிடிம் கதை கூறி அடுத்த படத்திற்கான ப்ளான் போட்டு விட்டனர். இரும்புக்கை மாயாவி என்ற காமிக் கதையை மையமாக கொண்டு இயக்கப்படும் திரைப்படம்.
இரும்புக்கை மாயாவி
இங்கிலாந்தில் ஆங்கிலத்தில் ‘தி ஸ்டீல் க்லா’ தமிழாக்கம் செய்யப்பட்டு இரும்புக்கை மாயாவி என்ற பெயரில் காமிக்க வந்தது. தமிழில் வந்த முதல் காமிக் கதை இதுதான். ஆங்கிலத்தை விட தமிழில் இந்த கதைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.
பிரபலமான காமக்கதை நடிகர் சூர்யா இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிரமாதமான காம்பினேஷன். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக வரும் போல இருக்கே!