ஆன்மிகம்ஆலோசனைசெய்திகள்தமிழகம்யூடியூபெர்ஸ்

அரோகரா முழக்கத்துடன் செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்!

பக்தர்கள் வெள்ளத்தில் ‘அரோகரா’ முழக்கத்துடன் செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்!

சூலூர் அருகே உள்ள மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷங்கள் விண்ணைப் பிளக்க சூரசம்ஹார நிகழ்வு வெகு விமரிசியாக நடைபெற்றது.

புராணங்களில் பாடப்பட்ட தனிசிறப்பு வாய்ந்தது கோவை மாவட்டம் சூலூர் அடுத்த செஞ்சேரி மலையில் அமைந்துள்ள மந்திரகிரி வேலாயுதசாமி திருக்கோயில். இக்கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி விழா கடந்த 13-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. கந்த சஷ்டி திருவிழாவில் நாள்தோறும் காலை யாகசாலை பூஜை நடைபெற்று மந்திரகிரி வேலாயுத சாமிக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள், மகா தீபாராதனை நடைபெற்று வந்தது. மேலும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருத்தேர் உலா வந்து பக்தர்களுக்கு அருட்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சஷ்டி திருவிழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் சனிக்கிழமை மாலை நடந்தது. இதையொட்டி அதிகாலையே நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட உங்களை கொண்டு சிறப்பு அபிஷேகத்துடன் தீபாராதனை நடந்தது.

மாலை மூலவரிடம் இருந்து வேல் வாங்கி பெரியநாயகி அம்மனிடம் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் அம்மனிடம் இருந்து வேலை பெற்றுக்கொண்டு மந்திரகிரி முத்துக்குமாரசுவாமி எருது வாகனத்தில் மலையடிவாரப் பிரகாரத்தில் எழுந்தருளினார். முதலில் தாரகாசூரனை வதம் செய்த முருகப்பெருமான், 2-வதாக பானுகோபனையும், 3-வதாக சிங்கமுகாசுரனையும் வதம் செயதார். பின்னர் சூரபத்மனின் தலையை தனது முருகப்பெருமான் தனது வேலால் துண்டித்து வதம் செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்களின் அரோகரா, கோஷம் விண்ணைப் பிளந்தது. பின்னர் சூரசம்ஹாரம் செய்த முருகப்பெருமானின் கோபம் தணிக்கும் விதமாக மகா அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சூரசம்கார நிகழ்வையொட்டி கோவிலுக்கு கூட்டம், கூட்டமாக பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *