மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்தி
நாம் கவலைப்படுவது சரியா!
காலை சூரியன் உதிப்பதும் மாலை சந்திரன் உதிப்பதும் இயற்கையின் நீதி. நான் சந்தோஷத்தில் இருந்தாலும் சரி துக்கத்தில் இருந்தாலும் சரி இயற்கையாக நடக்கும் கூடிய விஷயங்கள் நம்மை சார்ந்தது அல்ல. அதே போல் நாம் செய்யும் செயல் நம் கையில் இருந்தாலும் அதன் விளைவு நமக்கு அப்பாற்பட்டது.
நாம் செய்யும் செயல் நாமாக செய்தாலும் நமக்கு மேல் இருக்கும் ஒருவன் நம்மைப் படைத்த ஒருவன் அவனே நம்மை ஆட்டி வைக்கிறான். என்னதான் நம் ஆழ் மனதிற்கு இந்த விஷயம் தெரிந்திருந்தாலும் அந்த செயலின் விளைவுகளை எண்ணி மகிழ்வதும் சோர்வடைவது துக்கம் அடைவதும் என மனம் திண்டாடுகிறது. மனமெனும் குரங்கை கயிறு கட்டி இழுக்க ஆழ் மனதால் முடிவதில்லை. மானிடப் பிறப்பு தானே நாம்!
அந்த மனதை சரணாகதி அடைய வைத்தோமாயின் அந்த குரங்கை ஆடவைக்கும் ஆட்டக்காரராக இறைவன் செயல்படுவான். நமக்கு அப்பாற்பட்ட சக்தி உண்டு; அந்த சக்திக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை என்பதை உணர்ந்து ஒவ்வொரு பணியையும் இறைவனுக்கு அர்ப்பணித்து செயலானோமாயின் ‘அவன் இருக்க பயமேன்’ என நிம்மதியாக நம் வாழ்க்கையை வாழலாம்.
இதனின் எடுத்துக்காட்டாக ஒரு குட்டிக் கதையை இந்த காணொளி மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.