கேள்விகளைக் எழுப்பியும் பதிலளிக்காத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
கொரோனா பொது முடக்கத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவது மத்திய அரசின் கடமை. வட்டி வசூல் தொடர்பாக ரிசர்வ் வங்கி காரணம் காட்டி மத்திய அரசு தப்பித்துக் கொள்வதை ஏற்க முடியாது. எப்போதும் ரிசர்வ் வங்கியின் பின்னால் மத்திய அரசு ஒளிந்திருப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.
கடன் செலுத்துவோரின் பாதிப்புக்கு மத்திய அரசின் பொது முடக்க உத்தரவை காரணம் என்று உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளன. வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்ய கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றன. இது தொடர்பாக மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
ஆனால் இதுவரை மத்திய அரசு விளக்கம் அளிக்காத சூழலில் பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றம் இவ்வாறு கேட்டுள்ளனர். மூன்று மாதங்களுக்கு இஎம்ஐ செலுத்த வேண்டாம் எனும் வாடிக்கையாளர்களுக்கு தனியாக ஒரு ஆப்ஷன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட இதனை பயன்படுத்தி மூன்று மாத தவணையை தள்ளி வைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதே சமயம் இந்த மூன்று மாதங்களுக்கும் உரிய வட்டியை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூடுதல் வட்டியை தவிர்க்க நினைத்தால் எப்போதும் போல இஎம்ஐ செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன.
கூலித் தொழிலாளர்கள், தொழில் முனைவோர் என பலரும் வேலை செய்ய முடியாத நிலையில் இருப்பதால் இவற்றை கருத்தில் கொண்டு மூன்று மாதங்களுக்கு மக்கள் வங்கிகளில் பெற்ற கடனுக்கான இஎம்ஐ எனப்படும் மாத தவணையை செலுத்த ரிசர்வ் வங்கி அவகாசம் அளித்திருந்தது.
கடன் இஎம்ஐ தொடர்பாக வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் உரிய பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளன. நிபந்தனைகளுடன் கூடிய இஎம்ஐ சலுகையை மாநில மற்றும் தனியார் வங்கிகளை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.