காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நீடிக்க ஆதரவு”
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாகாந்தியே நீடிக்க அனைவரும் ஒருமனதாக முடிவெடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தகவல் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்து பஞ்சாப், கோவாம் உத்திரபிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தோல்வி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதனையடுத்து 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் பதவியை ராஜினாம செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா உத்தரவீட்டைருந்தார், இதனையடுத்து பலர் ராஜினாம செய்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி குறித்து பல சர்ச்சைகள் வெளியாகின, முக்கியமான ஜி-23 தலைவர் காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து அறிக்கைகளை வெளியிட்டு தங்களது அதிருப்தியை வெளியிட்டனர். இதற்கு மத்தியில் இன்று டெல்லியில் சோனியாகாந்தியை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், சோனியா காந்தியிடம் ஜி-23 கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டதாக கூறினார். மேலும் அவர் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் பெறப்பட்டதாகவும் சோனியா காந்தியே தலைவர் பதவியில் நீடிக்க காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரவு அளித்துள்ளதாகவும் கூறினார்.
அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக போராடுவது குறித்தும் கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது என்று கூறினார்.